உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

பெருவல்லத்தின் பெயர்களுள் ஒன்று ‘தீக்காலி வல்லம்' என்ப தாகலின் இவ்வாறு குறித்தார் என்க.

பாடல் வருமாறு.

சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரைநீ எனக் கூறக் கட்டலர் தாமரையுள் ஏழும் கடுமான்தேர்க் கத்திருவ ருள்ளைந்தும் காயா மரமொன்றும் பெற்றவிழ்தேர்ந் துண்ணாத பேயின் இருந்தலையும் வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயரென்றாள் வானவன்கை விற்பொறித்த வேற்புருவத் தாள்.

15. பதிப்புக் கலைப் பார்வை

பதிப்புக்கலை ஓர் அருமையான கலை; அறிவியல் சிறப் பால் அரும்பி மலர்ந்து மணம் பரப்பும் கலை; அக்கலை, நில்லாத வாழ்வை நிலைபெறப் பதியச் செய்து, நிலைக்க வைக்கும் கலை; வழி வழி வருவார்க்கு வளமார்ந்த வைப்பாகி வளர்க்கும், வனப்புக்கலை; தன் பதிப்புப் பொருள் போலவே பதிப் பாளியையும், அழியா அமர நிலைக்கு ஆக்கி வைக்கும் கலை!

பதிப்புக் கலையின் ஒரு சிறந்த பகுதி ‘பழஞ்சுவடி’களைத் தேடித் தொகுத்தும், பாதுகாத்தும், ஒப்பிட்டு ஆய்ந்தும், உண்மைப் பாடமும் பொருளும் கண்டு தெளிந்தும் 'கவின் பதிப்பென்னும் காட்சிப் பொருளாக்கி' வைப்பதாகும். புது நூல் படைத்துப் பதிப்பிப்பதிலும், சிதைந்தும் செல்லரித்தும் விடு பட்டும் விளங்காதும் உயிர் தாங்கிக் கொண்டிருக்கும் பழஞ் சுவடியைப் பதிப்பிப்பதன் அருமை, அதன் வயப்பட்டார்க்கே அறியக் கூடுவதாம்.

“ஏடு எடுக்கும் போது ஓரஞ் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது; ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது; இனி எழுத்துக்களோ வென்றால், னி