உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

-

213

வாலும் தலையும் இன்றி நாலுபுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கிறது” ஏட்டுச் சுவடி இயல்பைக் காட்ட இது போதுமே! கலித்தொகைப் பதிப்பில் திரு. சி. வை. தாமோதரர் எழுதியுள்ள முன்னுரைப் பகுதியில் உள்ள வரிகள் இவை!

பழஞ்சுவடியை ஆய்ந்து பதிப்பிக்கும் பணி, ஒரே முறையில் ஒருவரால் செப்பமாக அமைந்து, முற்ற முடியும் தன்மையது அன்று. “அறிதோறும் அறியாமை கண்டற்று” என்பது போல் பிழை கண்டு கண்டு வழிவழியே திருத்தம் பெற வேண்டிய இயல்பினது; ஆகலின், அறிஞர் பெரு மக்களின் உன்னிப்பான பார்வையில் பழஞ்சுவடிகளின் புதுப் பதிப்புகள் தடங்கலின்றி நடந்து கொண்டே இருந்தால் அன்றி, அச்சுவடியின் முழுப் பயனும் உலகம் கொள்ளுதற்கு இயலாதாம்!

அச்சுப்பணியோ நச்சுப்பணியோ' என்பது பட்டறிந் துரைத்த பழமொழி. அச்சுத்தாள் மெய்ப்புப் பார்த்துத் திருத்துதல், ஆட்ட ஓட்டப் பரபரப்புப் பணி அன்று: ஆர அமர்ந்து, ஊன்றி உணர்ந்து, கூர்ந்து குறிக்கொண்டு நோக்கிச் செய்யத்தக்க அரும்பணியாகும். இப்படி மெய்ப்புப் பார்க்க வல்லாரிடமும் ஒளிந்து விளையாடி மறைத்துக்கொள்ள வல்லது பிழை; அது. வேலையெல்லாம் முடிந்து நூலாகிவிட்டது என்று பதிப்பாளி மகிழும் போதிலே, தன் பிழைமுகம் காட்டித் ‘தப்பி விட்டேன். பார்த்தீரா!' என்று பழித்துக் காட்டி வினா எழுப்பும்! படிப்ப வர்க்குப் பளிச்சிட்டுத் தோன்றிப் பதிப்பாளிக்குக் ‘குற்றப் பட்டயம்’ தீட்டித் தந்து குளிரும்; இத்தகைய சிக்கல் மிக்க பணியைச் செப்பமாகச் செய்பவர், 'செயற்கரிய செய்யும் செம்மல்' என்று பாராட்டுதற்குத் தக்கோர் ஆவர்.

பழம் பதிப்பு நூல்களை ஆராய்தலாலும் பழம் பதிப்பாளர் குறிப்புகளை நோக்குதலாலும் அறியப் பெறும் சில அரிய கருத்துக்களைத் தக்க வகையில் சுட்டிச் செல்லுதல் இக்கட்டுரை நோக்கமாகும்.

அ. “ஆரிக்கும் - ஆரிரக்கும்”

ஆர்த்தல் என்பதற்குரிய பலபொருள்களுள் ‘ஒலித்தல்’ என்பது ஒரு பொருள். ஆனால் ஆரிக்கும்' என்றொரு சொல்லே வழக்கில் இல்லை. இருந்தும் சிலப்பதிகாரத்தில் ளங்கோவடிகள் இயற்றாமலே ஏடுபெயர்த்து எழுதியோர்