உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

இன்று

ன்று

பிழையால் நேர்ந்தது. பதிப்பாசிரியர் பிழையாகவும் பதிந்து உரைகாரர் பிழையாகவும் உருக்கொண்டு, வரை அப்படியே நிலைத்துவிட்டது. களையைக் களைவது போல் பிழையையும் பிழைக்க விடாமல் செய்வதே ‘பதிப்புச் செப்பம்’ ஆகும்.

66

“தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்

ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்”

என்பது ‘வாழ்த்துக் காதை'யில் வரும் 'வள்ளைப் பாட்டு'. ஆரிக்கும் என்பதற்கு ‘ஆர்க்கும்' என்னும் பாட வேறுபாடும் சிலப்பதிகாரப் பதிப்பில் காட்டப் பெற்றுள்ளது. ஆனால், ஆர்க்கும் ம்' என்பது இவ்வரிப் பாடலில் அமைந்துள்ள வெண்டளை இலக்கணத்தொடு பொருந்தாதது. ஆகலின் அப்பாடம் ஏற்கத் தக்கது அன்றாம். ‘ஆரிக்கும்' என்றொரு சொல்லே இல்லையாக, பொருளமைதியும் பொருந்திய தன்றாக, அதனை இளங்கோவடிகள் இயம்பினார் என்பது கொள்ளத்தக்கது அன்றாம்.

எனப்

சிலப்பதிகாரப் பதிப்பினைத் தம்மிடம் இருந்த சுவடியுடன் ஒப்பிட்டு நுனித்து ஆராய்ந்த அறிஞர் வையாபுரியார் ‘ஆரிரக்கும்’ பாட முண்மையைக் கண்டார். அதனை அகராதி நினைவுகள்’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டவாறு ‘ஆரிரக்கும்' என்று பாடம் இருப்பதே இலக் கணத்திற்குப் பொருந்தியதுடன், பொருளமைதியும் பொருந்திய தாகும்.

'தீங்கரும்பு' என்னும் ப்பாடலை அடுத்து நிற்கும் தாழிசைகள் இரண்டன் இறுதியும் முறையே "வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்” என்றும் "பனந்தோடுளங்க வரும் பாடலே பாடல்" என்றும் பாண்டியனுக்குரிய வேப்ப மாலையையும், சேரனுக்குரிய பனந்தோட்டு மாலையையும் குறித்தன. 'ஒரு பொருள் மேல் மூன்றடுக்கல்' என்னும் தாழிசை இலக்கணத்தின்படி முதற்பாடல் சோழன் அணியும் ஆத்தி மாலையைக் குறித்திருத்தல் வேண்டும். ஏனெனில், போந்தை (பனை) வேம்பே ஆர் (ஆத்தி) என வரூஉம் 'மாபெரும் தானையர் மூவேந்தர் ஆகலின். இங்கே சோழனது ஆத்திமாலை