உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

தமிழ் வளம் - பொருள்

215

மட்டும் இல்லாமை அறியத்தக்கது. அறியவே. 'ஆரிக்கும்' என்பது பிழையானது என்றும், ‘ஆர் (ஆத்தி) இரக்கும்' என்பதே பொருந்தியது என்றும் கொள்ளவேண்டும். ‘ஆர் இரக்கும்' என்பதற்கு ‘ஆத்தி மாலையை வேண்டும்' என்பது பொருள்.

L டாக்டர் உ. வே. சாமிநாதரின் பதிப்பொடும் ஏட்டுச் சுவடியை ஒப்பிட்டுப் பார்த்தே 'ஆரிரக்கும்' என்னும் பாட முண்மையைக் கண்டு தெளிகிறார் வையாபுரியார். அக் கருத்தையும் வெளிப்படுத்தியுரைத்தார்; கட்டுரைகளிலும் எழுதினார். ஆனால் ‘ஆரிக்கும்' என்னும் அப்பிழைச் சொல் உ. வே. சா அவர்களின் பின்வந்த பதிப்புகளிலும் மாறாமல் அப்படியே உள்ளது. அப்பதிப்பினை மூலமாகக் கொண்டு புத்துரை கண்ட நாவலர் ந. மு. வே. அவர்கள் உரையிலும் இத்திருந்திய பாடம் ஏறவும் இல்லை; உரைத்திருத்தம் பெறவும் இல்லை; அதன் மறுபதிப்புகளின் நிலைமையும் அப்படியே தான். "பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் - அம்மகளிர் ஆர்த்துச் செய்யும் பாடலே சிறந்த பாடலாகும்” என்று உரையும்; “ஆரிக்கும் ஆதரிக்கும் என்றுமாம்” என்று குறிப்பும் நாவலர் வரைந்துள்ளமையால் இச்சொல்லும் இப்பொருளும் சான்றொடும் அகரமுதலிகளில் சுட்டிக்காட்ட நேர்ந்துவிடல் உண்மை; இத் தவறுடைய பாடத்தைக் கருத்தில் கொண்டே பல்கலைக் கழக அகரமுதலியில் இச்சொல் ஏறியதையும் அதனைக் களைய வேண்டியதையும் திரு. வையாபுரியார் குறிப்பிட்டார். ஆயினும் என்ன? இந்நாள்வரை திருத்தம் பெறவில்லை; இனிவரும் பதிப்புகளிலேனும் இப்பொருள் பொதிந்த பாடம் போற்றிக் கொள்ளப் பெறுதல் வேண்டும். பாடங்கள் பழைய இலக்கண இலக்கியங்களில் பலவாக உள. கிடைக்கும் ஏட்டுச் சுவடிகள் அளவிலேனும் பதிப்பு நூல்களுடன் ஒப்பிட்டு நோக்கி ஆராயும் ஒருநிலை அறிஞர்களிடத்தோ, அராய்ச்சி அமைப்புகளிடத்தோ உண்டாகுமானால் இப் பொழுதும் கூட சில நல்ல பாடங்கள் கிடைத்தல் உறுதியாகும்.

ஆ. பார்ப்பார் - குரவர்

புறநானூற்றின் 34 ஆம் பாடல் சோழன் குள குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாகும். அப்பாடல் செய்ந்நன்றி மறவாமையைச் சீர்பெற விளக்குகிறது.