உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

66

இளங்குமரனார் தமிழ் வளம்

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றார்க் குய்தி இல்லென அறம்பா டிற்றே” ா

அப்பாடலின்

முற்பகுதி.

16

இதிலுள்ளது.

என்பது "பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்” என்னும் அடி. புறநானூறு உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே மூல ஏட்டில் டம் பெற்றிருந்தது என்பது "பார்ப்பாரைப் பிழைத்த கொடுந் தொழிலையுடையோர்க்கும்” என அவர் உரை வகுப்பதால் கொள்ளலாம். சிந்தாமணி முதலிய நூல்களில் இருந்தும் அவர் தக்க மேற்கோளை அவ்வவ்விடங்களில் அடிக்குறிப்பாகக் காட்டுவதைத் திருக்குறள் பதிப்பிலேயே காணலாம்.

இனி, நாவலர் அவர்களின் திருக்குறள் பதிப்பை உ. வே. சா. உ.வே.சா. அறியாமல் இருந்திருக்க இயலாது. ஏன் எனில், அப்பதிப்புக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர்களுள் முதல்வர் பெரும் பேராசிரியர் மீனாட்சி சுந்தரனார் அவர்கள். மற்றையோரும் தியாகராசர் முதலிய அவர்தம் மாணவர்களே. ஆகலின் ஆ குரவர்த் தப்பிய' என்னும் பாடத்தை உ. வே. சா. அறியாமல் இருந்திருக்க இயலாது. இருப்பினும் அதனைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்றே தெளிவு செய்ய வேண்டி யுள்ளது. நிற்க.

புறநானூற்றுக்குச் சிறந்த விளக்கவுரை ஆராய்ச்சியுரை ஆகியவற்றுடன் 1947 இல் உரை வேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்கள் ஒரு பதிப்பைக் கழக வழி வெளிக் கொணர்ந்தார். அப்பதிப்பில் 'குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்' என்னும் பாடமும் ‘தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை யுடையோர்க்கும்' என்ற உரையும் குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் எனத் திருத்தப் பட்டிருக்கிறது. "இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுள்ளதென்பது திருக்குறள் உரையால் காணப் படுகிறது” என்று விளக்கமும் வரைகின்றார்.

வை வ இவ்வாறு இருக்க, 'பார்ப்பார்' ‘குரவர்’ என்பவற்றுள் எது செவ்விய பாடமாக இருத்தல் வேண்டும்