உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

217

என்பதை நோக்கின் 'குரவர்' என்பதே நூலறிவுடையார்க்கு எளிதில் விளங்கும். ‘ஆன்முலை' முதலிய அடிகளில் அமைந்த மோனை நலம். 'பார்ப்பார்த் தப்பிய' என்னும் பாடத்தில் இல்லை. 'குரவர்த் தப்பிய கொடுமை' என்பதில் இனிது பொருந்திக் கிடக்கிறது. அன்றியும் பொருளாலும் குரவர் என்பதே சிறக்கின்றது.

66

எவ்வகை அறங்களிலும் தலையாய அறம் பெற்றோரைப் பேணுதல் என்பது வெளிப்படை; நம்மவர் சிறந்த பண்பாடும் கூட; “தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை” “தாய்சொல் துறந்தொரு வாசகம் இல்லை” “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” “தந்தை தாய்ப் பேண் என்பவை நம் குழந்தைப் பருவத்திலேயே கற்பித்து வரும் நன்மொழிகள். கோவலன் தன் குற்றமாகக் கண்ணகியிடம் கூறி வருந்தும் போது "இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன்” என்பதும் “தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழையாதே” என்னும் பழமொழியும் குரவர்த் தப்புதல் குற்றத்தை நன்கனம் வெளிப்படுத்தும்.

இராமநாதபுரம் திரு. பொன்னுசாமியார்

வேண்டு

கோளின்படி யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரால் “பல பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்துச் சென்ன பட்டணம் வாணிநிகேதன அச்சுக்கூடத்தில் துன்மதி ஆண்டு வைகாசி மாதம்" பதிப்பிக்கப் பெற்றது திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் கூடிய நூல். நாவலர் காலம் 1822- 1879. இதில் துன்மதி ஆண்டு 1861 ஆகும்.

சீரிய பதிப்புக்குச் செவ்விய அளவுகோல் ‘நாவலர் பதிப்பு’ என்னும் எண்ணம் பதிப்பாளர் படிப்பாளர் அனைவருக்கும் பதிந்து இருந்ததை இந்நாளைய அறிஞரும் அறிவர். அத்தகைய நாவலர் பதிப்பிலேயே செவ்வைப்பட வேண்டிய குறிப்புகள் ருந்தன எனில் ஏனையோர் பதிப்பைக் குறிக்கவும் வேண்டுமோ?

தமிழ்ச் சங்கத்தில் இருந்த பரிமேலழகர் உரைச்சுவடி களோடும், அச்சிட்ட நூல்களை ஒப்பிட்டு ஆராய்ந்தார் பேரறிஞர் இரா. இராகவர். பல சுவடிகளைப் பல நூல்களொடும் ஒப்பிட்டுப் பார்ப்பது போலும் அச்செயல் அரிதே. துன்பமிக்க அப்பணியும், அதனால் உண்டாகும் பயன் கருதி இன்ப மிக்கதாய் அமைந்து எழுச்சியூட்டுகிறது! இதனை ஆய்வில் தலைப்பட்ட அறிஞர்களே உணர்வர். தினைத் துணை