உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ் வளம்

16

நன்மையையும் பனைத் துணையாக் கொள்வது பயன் தெரிவார் செயலாகலின், பனைத்துணை நன்றியை எளிதில் விடுவரோ?

பதிப்பித்த பரிமேலழகர் உரையில் பல திருத்தங்கள் கிடைக்கக் காண்கின்றார் அறிஞர் இரா. இராகவர். அவற்றுள் மூன்றை மட்டும் செந்தமிழில் விளக்கி வரைந்தார்.

“சிதைவகல் காதல் தாயைத்

தந்தையைக் குருவைத் தெய்வப் பதவியந் தணரைஆவைப்

பாலரைப் பாவை மாரை

வதைபுரி குநர்க்கு முண்டாம்

மாற்றலாம் ஆற்றல் மாயா உதவிகொன் றார்க்கென் றேனும்

ஒழிக்கலாம் உபாய முண்டோ?”

(கம்ப, கிட்கிந்தை. 62)

என்னும் கம்பர் வாக்கின் தொடக்கமே 'குரவர்' விளக்கமெனல் வெளிப்படை. தாயைத் தந்தையைக் ‘குருவை' என்பது குரவர்களையல்லவோ விளக்குகின்றது; இதனைக் கருதின் நாவலர் சுட்டிய பாடமே தக்கது என்பது இனிது விளங்கும்.

பதிப்புப் பணியில் புகுவார் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் பணித்தூய்மையே அணியாய்ப் பூண்டு விளங்குதல் வேண்டும் என்பதும், தமக்கு முற்பட்டு விளங்கும் ஆராய்வாளர் கருத்துகளைக் கருத்தில் கொண்டு கடனாற்ற வேண்டும் என்பதும் கடைப்பிடியாகக் கொள்ளத் தக்கனவாம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் 'பாண்டியன் புத்தக சாலை'யில் அரிய பல ஏட்டுச் சுவடிகள் தொகுத்து வைக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் அச்சிடப் பெற்ற நூலின் சுவடிகளும் இருந்தன. அச்சிடப் பெறாத சுவடிகளும் இருந்தன. அச்சிடப் பெற்ற நூலின் சுவடிகளுள், ‘திருக்குறள் பரிமேலழகர் உரைச்' சுவடிகள் நான்கு இருந்தன. அச் சுவடிகளுக்கு உரியவர்கள், ஆழ்வார் திருநகரித் திருமேனிக் கவிராயர் வழித்தோன்றிய இரத்தின கவிராயர் மகனார் தாயவலந் தீர்த்தான் கவிராயர், திருச்சுழியல் சோமசுந்தர கவிராயர், திருநெல்வேலித் திருப்பாற் கடனாதன் கவிராயர், துன்படக்கிக் கோட்டை முத்து வயிரவ நாதப் புலவர் என்பார்.