உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

219

தமிழ்ச் சங்கச் சுவடிகளை ஆய்வதற்கென்றே புலவர்கள் அமர்த்தப் பெற்றிருந்தனர். செந்தமிழ் இதழாசிரியரும், தமிழ்ச் சங்கக் கல்லூரித் தலைமையாசிரியரும், பிறரும் அத் துறையில் தலைப்பட்டு அயராது உழைத்து வந்தனர். தொடக்க நாளில் செந்தமிழ் இதழாசிரியராக இருந்தவர் பெரும் புலவர் இரா. இராகவர் ஆவர். அவர் தாம் ஆய்ந்து கண்ட அரிய குறிப்பு களை ‘ஆராய்ச்சி' என்னும் தலைப்பிட்டுச் செந்தமிழில் எழுதி வந்தார். அவர் மேலே குறிப்பிட்ட நான்கு சுவடிகளையும். அச்சிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரை நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். தாம் கண்ட அரியவும் உரியவுமாகிய செய்திகளை அறிஞர்கள் அறிந்து போற்றுமாறும், அடுத்துப் பதிப்பிடுங்கால் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெளிப்படுத்தினார்.

ல்

கி.பி. 1812 இல் திருக்குறள் மூலமும், நாலடியார் மூலமும் இணைந்த ஒரு பதிப்பை அம்பலவாண கவிராயர் வெளி யிட்டார். சரவணப் பெருமாளார் உரைப் பதிப்பு 1838 வெளிப்பட்டது; வேதகிரியார், பரிமேலழகர் உரையுடன் 1849 இல் வெளியிட்டார். இதன் பின்னர் 1861, 1875, 1876, 1891 ஆகிய ஆண்டுகளிலும் பரிமேலழகர் உரைப் பதிப்பு வெளிப் பட்டது. இவற்றுள் ஆறுமுக நாவலர் பதிப்பும் ஒன்றாகும்.

புறநானூற்றில்

66

வரும் இப் பகுதியை எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்னும் திருக்குறள் உரை விளக்கத்தில் ஆசிரியர் பரிமேலழகர், ‘பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன் முலையறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த் தபுத்தலும் முதலிய பாதகங்களைச் செய்தல்' என உரைநடை யாக்கிக் காட்டுகின்றார். ஆகலின், அவர் காலத்திலும் இப் பாடம் இருந்தது என்பது உறுதியாகின்றது.

1861 ஆம் ஆண்டில், அஃதாவது துன்மதி ஆண்டு வைகாசித் திங்களில் திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையுமாக ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பித்த பதிப்பில், பரி மேலழகரின் உரைப் பகுதியின் அடிக்குறிப்பாக மேலே குறித்த புறநானூற்றுப் பகுதியை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அதில், மூன்றாம் நான்காம் அடிகள்,

"குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வருவாய் மருங்கில் கழுவாயும் உளவே”

என்னும் பாடத்துடன் உள்ளன. இப் பதிப்பு வெளிப்பட்டு 33 ஆண்டுகள் கடந்த பின்னரே (1894) உ. வே. சா. அவர்களால்