உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

புறநானூறு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இருந்தும், இப்பாடம் கொள்ளப் பெற்றிலது.

உ. வே. சா. அரிதின் முயன்று ஏடுகள் தொகுத்து ஒப்பிட்டுப் பாட வேறுபாடுகள் கண்டு ஒப்பாரும் மிக்காரும் இல்லா நிலையில் தமிழ்நூல்கள் வெளியிட்டுள்ளனர். அவர் காட்டியுள்ள பாட வேறுபாடுகளும், ஒப்புமைப் பகுதிகளும் அவர்தம் அயரா உழைப்பிற்குச் சான்றாக இலங்குவன. புற நானூற்றுப் பதிப்புக்கு, மூலப் படிகள் எட்டும், உரைப்படிகள் பதின்மூன்றும் பயன்படுத்தப் பட்டுள்ளன. எனினும் ‘பார்ப்பார்’ வழுவாய்' என்பவற்றுக்குப் பாட வேறுபாடுகள் காட்டப் பெற்றில; ‘உளவே' என்னும் பாட வேறுபாடு மட்டும் காட்டப் பெற்றுளது. அவருக்குக் கிடைத்த படிகள் எவற்றிலும் இப் பாட வேறுபாடே இல்லையா? நாவலருக்கு இப் பாட வேறுபாடு எப்படிக் கிடைத்தது?

புறநானூற்றுச் சுவடிகள் தமிழகத்தில் மட்டுமா கிடைத்தன? ஈழத்திலும் கிடைத்தன; ஐயரவர்கள் பதிப்புக்கு, யாழ்ப்பாணம் திரு. சதாசிவனார், திரு. த. கனக சுந்தரனார், திரு. வி. கனகசபையார் ஆகியோரின் மூலப்படிகளும், திரு. சி. வை. தாமோதரரிடம் இருந்த திருத்தணிகைச் சரவணப் பெருமாளார் மூலப்படியும், வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதரின் உரைப்படியும் பயன்பட்டுள்ளன. இப்படிகளை வழங்கியவர் களுள் சதாசிவம் என்பார் ஆறுமுக நாவலர் அச்சுக்கூடப் பொறுப்பாளராக இருந்தவர். ஆதலால் தமிழ் உலகிலும், சைவ உலகிலும் அரிமாவென விளங்கிய நாவலர், ஒரே ஒரு பிழையைக் கண்டு பிடிக்கவும் இயலாத வகையில் எந்நூலையும் பதிப்பித்த பதிப்புக்கலை ஏந்தல் புறநானூற்றுச் சுவடிகளைத் தம் கைவயம் வைத்திருந்ததையோ ஒப்பிட்டு ஆய்ந்ததையோ ஐயுற வேண்டுவ தில்லை. அவர் கண்ட செப்பமான பாடம் சிதைந்துவிடக் கூடாது என்பதால் அதனை அடிக்குறிப்பாகக் காட்டினார். உ. வே. சா. அப்பாடத்தைப் போற்றிக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

இ. திருக்குறள் உரையில் கிடைத்த பாடங்கள்

66

“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்

என்னும் 320 ஆம் குறள் விளக்கத்தில் பரிமேலழகர் “உவர் நிலத்து விளைவித்திட்டார்க்கு விளைவும் அதுவே யாதலின்