உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

221

நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்றார்” என்று அச்சுப் படிகளில் பாடம் இருந்தது. ஆனால், ஏட்டுச் சுவடிப் பாடம் 'உயிர் நிலத்து வினை வித்திட்டார்க்கு' என்பது . 'உவர்’ 'உயிர்', என்பவற்றிலும் 'விளை' வினை' என்பவற்றிலும் ஏற்பட்டுள்ள எழுத்து வேற்றுமை சிறிதே எனினும் பொருள் வேற்றுமை எத்துணைப் பெரிதாகின்றது! பின்னதிலுள்ள பொருட்சிறப்பு முன்னதில் எதுவும் இல்லையாய் வறிதாய் ஒழிகின்றதே! ஆராய்ச்சியாளர், “வெவ்வினை செய்யுமாந்தர் உயிரெனும் நிலத்து வித்தி அவ்வினை விளையுள் உண்ணும்” என்னும் சிந்தாமணிச் செய்யுளை எடுத்துக் காட்டும் போது (முத்தி. 164) ஈதன்றோ உண்மைப் உண்மைப் பாடம் என்று வியப் புறுகின்றோமே! “ஈத்துவக்கும் இன்பம்” என்பதும் ஈதன்றோ! த்தெளிவு மிக்க பாடத்தைத் தந்தது, துன்படக்கிக் கோட்டை ஏட்டுச் சுவடியாம்!

66

66

‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்”

என்னும் 582 ஆம் குறள் விளக்க உரையில் “நிகழ்வன வெல்லாம்” என்றது நல்லவுந்தீயவுமாய சொற்களையும் செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க வழியாகத் தேறுதலாகச் செய்ய வேண்டுதலின் வல்லறிதல் என்றும், அவ்விரு தொழிற்கும் அறிதல் காரணமாகலின் அதனையே உபசார வழக்கால் தொழிலென்றுங் கூறினார்” என்பது அச்சிட்ட நூல்களில் கண்ட பாடமாக இருந்தது. ஆழ்வார் திருநகரிச் சுவடியில் யில் தக்க ‘வழியாகத் தேறுதலாக' என்னும் பகுதி ‘தக்க அளியாகத் தெறலாக' என்று இருக்கக் கண்டார் இராகவர். அச்சுப்படியின் பாடத்திலும் சுவடியின் பாடம் முன்னையோர் மரபின் முத்திரையாய் இலங்குவதைக் கண்டு இன்புற்றார்.

“கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும் ஒடியாமுறையின் மடிவிலை யாகி”

“தெறலும் அளியும் உடையோய்”

"அளியுந் தெறலும் எளிய வாகலின்'

(புறம். 29)

(புறம்.2)

(பெரும்பாண்)

என்பவற்றையும், அவற்றின் உரையையும் எடுத்துக் காட்டி

ஏட்டுப் பாடத்தின் இனிமையை நிறுவினார்.

'உப்பமைந் தற்றாற் புலவி'