உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

7

சொல்லும் செயலும், எச்சொல்லும் செயலும் ஆயின் என்ன? எல்லாம் எல்லாம் அறம்! அறத்தை எண்ணிக்கை இட்டு எண்ணிக் காண்பார், விண்ணக மீனையும் மண்ணக மணலையும் எண்ணிக் காணத் தொடங்கி இளைத்துப் போனவரே ஆவர்!

இன்னொரு சான்று :

தவம் என்பது யாது? தன் துயர் பொறுத்தல்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; இவை தவம்! தவத்திற்கு வகுத்த புறக்கோலம் அறக்கோலமாமோ? அறக்கோலத் தவக் கோலம், அகக் கோலமேயன்றிப் புறக்கோலமாமோ? புறக் கோலத்தில் நன்கோலமும் உண்டு! புன்கோலமும் உண்டு. உலகறிந்த சான்றுகள் பலப் பல.

ஆனால் தூய அகக்கோலத் தவக்கோலம், அவக் கோல மாகுமோ? இன்னும் சொல்கிறாரே! ‘தவம் செய்வார் தங்கருமம் செய்வார்'! கடமை! கடமை! மனமாசில்லாக் கடமையெல்லாம் தவமே! தவமே! மாற்றுக்குறையா இத்தவமே ஏற்றுக் கொள்ளற்கு உரியதன்றோ! இனி வீழ்ச்சியிலும் வாழ்ச்சியுரைத்தற்கு ஒரு சான்று, இழப்பு, இடுக்கண், நோய், நொடி - இவை வாழ்வில்வரின் தளர்வார் மிகப் பலர்; தவிப்பாரும் பலர், தம்மை வெறுத்துத் தமக்கு அழிவு தாமே செய்வாரும் உளர். அன்னவர்களை அணுகி ஆரத் தழுவி, ‘நுமக்கு நேர்ந்த இழப்பு இடுக்கண், நோய் நொடி ஒரு பெருநலம் செய்வதை உணர்க. நுமக்கு மெய்யான உறவாளர் எவர் என்பதை இப்பொழுதுதான் நும்மால் அறிந்து கொள்ளுதற்கு வாய்ப்பு; இவ்வாய்ப்பு நுமக்குக் காலமெல்லாம் பயன்படும்! தெளிவுக்கு வாய்த்த வாய்ப்பை, அழிவுக்கு என எண்ணி அயராதீர்!” என்கிறார்.

“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்”

'நான் காலமெல்லாம் நல்லது செய்தேனே! நன்றி மறந்து விட்டாரே! நன்றி மறந்தாலும் போகிறார்; எனக்குக் கேடு சூழ்கிறாரே! என்று ஏங்குவார் எத்துணையர்? அவரைத் தழுவிப் புன்முறுவலுடன் புகழ்கிறார் வள்ளுவர். 'நீவிர் நலப்பாடு செய்தது உண்மை; அந்நலப்பாட்டைச் செய்யும் வகையால் செய்யத்தக்கார்க்கு நீவிர் செய்ய வேண்டும் அன்றோ? செய்யப் பெறுவார் பண்பை அறியாமல் என்ன செய்தும் என்ன? ஆதலால் நும் செயலை மீள்பார்வை பார்க்க; எதிர்காலத்தில் இத்துயர் எய்தாது' என்கிறார்.