உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

சு

223

அரங்கனாரின் பதிப்புக்கு கிடைத்த சுவடிகள் மூன்றே அவை சென்னை அரசின் நூல் நிலையச் சுவடி ஒன்று; மணக்கால் ஐயம்பேட்டை முத்துரத்தினர் சுவடி ஒன்று; மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி ஒன்று; இவற்றைக் கொண்டே மூலத்தை உறுதிப் படுத்திக்கொண்டு ஒருவாறு உரையெழுதி வெளியிட்டார்.

66

இக் குறுந்தொகைப் பழம் பிரதியுடையார் தம் பிரதியைச் சில வாரம் யான் வைத்துக்கொள்ளுமாறு உதவினும் அன்றித் தங்கள்பால் வந்து பார்த்துக் கொள்கவெனக் கட்டளையிடினும் அவர்கள் கருத்தின்படி பார்த்துக் கொண்டு கிடைக்கும் அரியவற்றைச் சேர்த்து மறுபதிப்பிற் பதிப்பிக்குங் கருத் துடையேன். ஆதலின் அங்ஙனம் உதவ முன்வரும் தமிழபிமானம் மிகுந்த தக்கார்களுக்கு இப் பதிப்புப் பிரதியில் ஒன்றைத் தருவதோடு மறுபதிப்பிலும் அவர்கள் பிரதி கொடுத்து உதவியமையைப் பாராட்ட எட்டுணையும் மறவேனாவேன் என்று குறுந்தொகைப் பதிப்பில் 'உதவியுரைத்தல்' பகுதியில் அரங்கனார் எழுதியுள்ளது தக்க ஏட்டுச் சுவடிகளைத் தேடி ஆய்தலில் அவர் கொண்டிருந்த பேரார்வத்தை வெளிப்படுத்தும்.

ாவது

பதிப்புத் துறையில் சீரிய பணி செய்த திரு. வையாபுரியார், அரங்கனார் பதிப்புப் பற்றி வெளியிட்டுள்ள கருத்துகள் கருதத் தக்கன. “எத்துணையோ பெரும் பிழைகள் காணப்படினும் அரங்கனாரை நாம் போற்ற வேண்டியவர்களாக உள்ளோம். முதலாவது அவர்க்குக் கிடைத்த பிரதிகளின் நிலைமையே பிழைகள் பலவற்றுக்கு காரணமாயுள்ளது. இரண்ட குறுந்தொகையின் நலத்தைத் தமிழ் மக்கள் ஒருவாறு உணரும் படியாகச் செய்தார். மூன்றாவது தமிழறிஞர்களுடை உள்ளத்தைக் குறுந்தொகைத் திருத்தத்தில் ஈடுபடும்படியாகச் செய்தார். நான்காவது குறுந்தொகைக்கு நல்ல பதிப்பு வெளிவர வேண்டும் என்ற அவா தமிழ் நாடெங்கும் உண்டாகும்படி செய்தார்” (தமிழ்ச் சுடர் மணிகள்).

1930 இல் புரசைபாக்கம், டி. என். சேசாசலம் என்பார் இரத்தினம் என்பவரின் புத்துரையுடன் கலா நிலைய’ வெளியீடாகக் குறுந்தொகையை வெளியிட்டார்.கா.நமச்சிவாயர் மூலப் பதிப்பு ஒன்று வெளியிட்டாராம். 1933 இல் சோ. அருணாசலரும் மூலப்பதிப்பு ஒன்று வெளியிட்டார். ஆனால், “இப் பதிப்புகள் எல்லாம் ஓலைச் சுவடிகள் கொண்டு ஆய்ந்து வெளிப்பட்டவை அல்ல” என்று வையாபுரியார்