உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

224

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

குறிப்பிடுகிறார். ஆதலால் இப் பதிப்புகளுக்கு மூலமாக விளங்கியது, அரங்கனார் பதிப்பே என்பது வெளிப்படை.

1933 ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 12, ரல் 10 இரா. சாம்பசிவனாரால் மூலமும் விளக்கவுரையும் எழுதப் பெற்று 1937 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. இம்முயற்சி, அரிய முயற்சி; விளக்கம் மேற்கோள் ஆகியன மிக விரிவுடையன; எனினும் ஐம்பது பாட்டுகள் அளவோடும் அமைகின்றது. டாக்டர் உ. வே. சாமிநாதரின் குறுந்தொகைப் பதிப்பு 1937 இல் வெளிவந்த அளவில், இக் கட்டுரை உரை விளக்கத் தொடர் அமைகின்றது என்பது உணர முடிகின்றது. சாம்பசிவனார் தமக்குக் கிடைத்த சுவடி கொண்டும் ஒப்பிட்டாராதல் வேண்டும்; இன்றேல், தாம் தக்க பாடமெனக் கொண்டு திருத்தியிருக்க வேண்டும்; ஏனெனில், ஐம்பது பாடல்களுக்குள் அரங்கனார் கொண்ட பாடத்தில் இல்லாத புதுப்பாடங்கள் மூன்று காட்டியுள்ளார், அவை 'தேமூரொண்ணுதல்’ (22), அரிதயர் (29), நினையலேன் (36) என்பன.

இல் ல் இருந்து இலந்தையடிகள் வித்துவான்

1937-இல் முனைவர் உ. வே. சாமிநாதர், குறுந்தொகைப் பதிப்பு உரை விளக்கத்துடன் வெளிவந்தது.உ.வே.சா. வழக்கம்போல் பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து மூலத்தை உறுதிசெய்து கொண்டு உரை விளக்கம் வரைந்து பாட வேறு பாடுகள் மேற்கோள்கள் ஆகியவற்றையும் காட்டி வெளியிட்டார். அவர் தம் ஆய்வுக்குப் பயன்பட்ட சுவடிகள் 9. அச்சுவடிகளாலும் அவர்களின் அறிவாற்றல், அயரா உழைப்பு, உதவியாளர் திறம் ன்ன பல ஏந்துகளாலும் குறுந்தொகைப் பதிப்பு வெளிவந்தது. எனினும், “சில செய்யுள்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிவு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி ‘உண்டாகவில்லை” என்று அவர்கள் குறிப்பிடுவதால் முற்றிலும் தெளிவான பாடம் கிட்டவில்லை என்பதும் செவ்விய சுவடிகள் கிடைக்கப் பெறுமாயின் தெளிவு பெறக் கூடும் என்பதும் அவர்கள் கருத்தாதல் விளக்கமாகும்.

அரங்கனார், சோழவந்தான் கிண்ணிமங்கலம் மடத்தில் இருந்த சிவப்பிரகாச அடிகளிடம் பயின்றவர். அவ்வடிகளிடம் பயின்றவர்களுள் ஒருவர் கந்தசாமியார். அவருக்கு அரங்கனார் குறுந்தொகைப் பதிப்புக் கிடைக்க வாய்த்திருத்தல் இயல்பே. அப் பதிப்பில், தம் ஆய்வுத் திறம் விளங்க ஒப்புமைப் பகுதிகளை மிகப் பெரிய அளவில் சுட்டியுள்ளார் கந்தசாமியார். பிழைகளைத்