உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

225

திருத்தியுள்ளார்.பதிப்பில் காணப்பெறாத ஒப்புமைப்பகுதிகளையும் கந்தசாமியார் குறித்துள்ளார் எனின், அவர் தம் நினைவுக் கூர்ப்பும் அருமையும் புலப்படும். அன்றியும் "இராமசாமிபுரம் மூவரைய வண்ணம் பாடிய பூண்டியப்பப் புலவர் ஏடு பார்த்துத் திருத்தியது” என்னும் தலைப்புக் குறிப்புடன், அவ்வேட்டுச் சுவடியில் கண்ட பாட வேறுபாடுகளையும் குறித்துள்ளார். இப்பாட வேறுபாடுகளுள் மிகப் பல உ. வே. சா பதிப்பில் காணப் பெறுவன எனினும், காணப் பெறாதவையும் உள. அவற்றுள் உண்மைப் பாடம் இதுவே எனக் காள்ளத் தக்கனவும் உள.

கந்தசாமியார், தாம் குறுந்தொகைச் சுவடியுடன் அச்சிட்ட நூலை ஒப்பிட்டுக் கண்ட பாடவேறுபாடுகளைத் தமிழ் நலம் கருதிய இதழ்களில் வெளிப்படுத்தியிருந்தால் அவ்வெளிப்பாடு அறிஞர்கள் ஆய்வுக்குக் கருவியாக அமைந்திருக்கும். அது, 1946 இல் ல் பெரும் புலவர் இரா. இராகவர் உரை விளக்கம் வரையப் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்த 'குறுந்தொகை விளக்’கத்திற்கு (111 பாடல்கள்) உதவியாக இருந்திருக்கக்கூடும். 1965 இல் இல் கழக வழியாக வெளிவந்த பெருமழைப் புலவர் பொ. வே. சோம சுந்தரனார் உரைக்கும் உதவியிருக்கக் கூடும். “மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று” என்று திருவள்ளுவர் உரைத்தாற் போல் அப்பாட வேறு பாடுகள் அவர்தம் குறுந்தொகை நூலில் எழுதி வைத்த அளவில் அமைந்தன. அவ்வரிய குறிப்புகள் பொதிந்த நூல், அவர் தம் வரலாற்றை எழுதுதற்கு யான் முயன்ற காலையில் கண்டும் கொண்டும் மகிழ வாய்த்தது. அப் பாடங்களை அறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தால் வெளிப் படுத்தலானேன். “பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பை’

என்னும் பாடலில் (372) 'நெடுவெண் குப்பை என்பதற்கு உரையாளர்கள் ‘நெடிய வெள்ளிய மணற்குவியல்' எனப் பொருள் கண்டுள்ளனர். 'வெண்' என்பதற்கு 'வெண் மணல்' என்றது வருவித்து உரைத்தலேயாம். ஆனால் பூண்டியப்பப் புலவர் ஏட்டில் ‘நெடுமணற் குப்பை' என்று பாடமுண்மை டரின்றிப் பொருள் காண உதவுகின்றது.

66

309 ஆம் பாடலில் இன்னா தனபல செய்யிலும், நின்னின்றமைதல் வல்லா மாறே" என்பதில் "இன்னாதியல்பல'