உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

எனப் பாடம் காட்டுகிறது. இப் பாடம் நுண் பொருள் சிறப் புடையதாம்.

274 ஆம் குறுந்தொகை,

“புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க் காசினை யன்ன நளிகனி உதிர”

என்று எல்லாப் பதிப்புகளிலும் உள்ளது. பூண்டியப்பர் ஏட்டால்,

66

'புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅத்

திறவுச் சினையன்ன நளிகனி உதிர

என அறியப் பெறுகின்றது. இப்பாடத்தால் எதுகை நயம் வாய்ப்பதுடன், உவமை நயமும் செறிதல் வெளிப்படும். இறவுச் சினையாவது இறவு அல்லது இறால்மீனின் முட்டை. அதனை உகாவின் கனிக்கு ஒப்புக் கூறினார்.

பூண்டியப்பர் சுவடியால் அறியப் பெறும் பாடங்களை யெல்லாம் குறிப்பிட்டு விடுதல், ஆய்வார்க்குப் பயனாகும் என்பதால் அவற்றைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகக் குறுந்தொகைப் பதிப்புக்கு வழங்கப் பட்டுப் பயனும் ஆயிற்று.

16. மரபியலில்

ஓர் இடைப்பாடும் இடர்ப்பாடும்

மரபு காக்க வந்த மாண்பு நூல் தொல்காப்பியம். மரபியலோ, மரபுக் காப்பின் வைப்பகம். இத்தகு மரபியலிலேயே, மரபுக் கேடுகள் செறிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நோக்கும் போக்கும் அறியார், இடையிடைச் செறித்து நடைக்கேடு புரிந்துள்ளனர். இதனைப் பாயிரம் மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்று சுட்டுகிறது; 'மாற்றருஞ் சிறப்பின்' மரபியலிலேயே நூற்பா மாறிக் கிடக்கவும் நேர்ந்துள்ளன. இவற்றுள் ஒன்றனைப் பற்றியது இக்கட்டுரை.

இளமைப் பெயர், ஆண்மைப்பெயர், பெண்மைப் பெயர் என்னும் மூவகைப் பெயர்களை முறையே கூறப்புகும் ஆசிரியர், அம்முறையே முறையாக இளமைப்பெயர் இவை இவை, இன்ன இன்னவற்றுக்கு உரியன என விரித்தார்.

66

அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை" என்றார் ஆசிரியர். பறப்பவற்றின் இளமைப் பெயர் பார்ப்பும்