உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ் வளம் 16

செயல் ஈனுதல் எனப் பெறுமோ என்னும் ஐயம் கழக நூல் அறிந்தார்க்கு எழாது. பறவை, ஈனில் இழைத்தல் ஆங்குப் பயில வழங்கும் செய்தியாதல் அறிவர். ஆகலின் பறவையின் இளமைப் பெயர்களுள் ‘பறழ்’ என்பதும் ஒன்று என்று கொள்வதற்கு வாய்க்கின்றது. அதே பொழுதில் பறவை பறழ்ப் பெயர் பெறுதலை ஆசிரியர் சுட்டினார் இலரே என்னும் தடையும் தலை தூக்குகிறது.

சான்றுகள் கிட்டாதவற்றுக்கு இலக்கணம் உண்மையும், சான்றுகள் கிட்டுவனவற்றுக்கு இலக்கணம் இன்மையும் ஆகிய இருதலைக் குறையும் எண்ணி, நூற்பாக்களின் வைப்பு முறையை நுண்ணிதின் நோக்கின் தெளிவு பிறக்கின்றது. இருதலைக் குறையும் போகி, இருதலை நிறையும் செறிகின்றது.

அவற்றுள்,

“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”

66

“தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன'

என்னும் நூற்பாக்களை அடுத்து,

99

“பறழ்எனப் படினும் உறழாண் டில்லை'

என்னும் நூற்பாவைத் தொடர்புறுத்தி வைப்பின் மரபு நிலை மாறா மாண்பு தெளிவாம்.

இத் தொடர்புறுத்தலால், பறப்பவை பார்ப்பு பிள்ளை என்பவற்றுடன் பறழ் என்னும் பெயரையும் பெறும் என்றும், தவழ்பவையும், இப் பெயர்களைப் பெறும் என்றும் கொள்ள வாய்க்கும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்னும் கொள்கையும் சிறக்கும்.

இனிப், பறழ் என்பது மந்தியின் இளமைப் பெயராகப் பயில வழங்குவது போல், பார்ப்பு என்னும் பறவையின் இளமைப் பெயரும் மந்திக்கு வழங்குதல் காண்பார் இயைத்துப் பார்த்து இனிது மகிழலாம். "கருவிரல் மந்தி அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு" என்றும், “கருவிரல் ஊகம் பார்ப்போ டிரிய” என்றும் வருவனவற்றையும் மலைபடு. 312 - 3, 208; குறுந்தொகை 249, 279, 335; ஐங்குறுநூறு 280; அகநானூறு 288 ஆகியவற்றையும் காண்க.

பார்ப்பு என்னும் பறவையின் இளமைப் பெயரை மந்தியினம் பயில வழங்கப் பெற்றது போலவே, ‘பறழ்' என்னும்