உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவையின்

தமிழ் வளம் - பொருள்

இளமைப் பெயரையும் பயில்

பெற்றுள்ளது என்பதையும் கருதுக.

229

வழங்கப்

இனிப் பறவையின் இளமைப் பெயர் மந்தியினத்தின் இளமைப் பெயர்க்கும் உரித்தாதற்கு யாதானும் ஓரியைபு இருத்தல் வேண்டும் எனின் பறவை பெரும்பாலும் கோடு வாழ்வுடையது ஆகலானும், குரங்கு 'கோடு வாழ் குரங்கு’ ஆகலானும், கிளை விட்டுக்கிளை தாவும் மந்தி பறவையெனத் தோற்றுதலுண்டாகலானும் இவ்விளமைப் பெயர் இயைந் திருக்கக் கூடும்.

ஒரு நூற்பாவின் வைப்பு முறை இடைப்பாடு எத்தகு டப்பாட்டையெல்லாம் ஆக்கும் என்பதும், பெரும் பெரும் புலவோரையும் எவ்வெவ்வாறெல்லாம் வலிந்து உரை காணவும், நலிந்து கைவிடவும் ஏவும் என்பதும், நூன் முறை ஓதுங்கால், நூற்பா வைப்பு முறை நோக்குதலும் இன்றியமையாதது என்பதும் கருதிக் கடைப்பிடித்தற்கு உரியனவாம்.

இருக்கும் மரபை விடுவானேன்?

இல்லா மரபைத் தொடுவானேன்? இருக்கும் இடத்தில் பிறழ்வாகி

இயையும் நூற்பா உறழ்வாலே!

17. அகவற் பாவின் ஈறு

காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாடுகளுள் ஒன்றால் வெண்பா முடிதல் வேண்டும் என்னும் வரையறையை யாப்பு நூல்கள் வெளியிடுகின்றன. காரிகை உரையாசிரியர், “எல்லா வெண்பாவிற்கும் நாளென்னும் நேரசைச் சீரானும், மலரென்னும் நிரையசைச் சீரானும் காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் குற்றியலுகரம் ஈறாகிய நேரீற்றியற் சீரானும் இற்ற முச்சீரடியே இறுதியாம்" என்று 'நேரிசை இன்னிசை போல' என்னும் காரிகைக்கண் விளக்கி எழுதுகின்றார். ஆனால், அகவற் பாவின் ‘முடிநிலை' இன்னதென இலக்கண நூல்கள் வரையறுத்துக் காட்டிற்றில. அது பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாம்.

அனைத்துப் பாக்களும் வெண்பா, அகவல் என்னும் இரண்டனுள் அடங்கும் என்பது தொன்னெறி. ஆக, வெண் வைப் போல் அகவற்பாவின் முடிநிலையும் இன்னதென

பா