உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ் வளம்

16

(49)

ஏவல்செய் தின்ப முறுவார் எல் லோ ருமிக் கேங்க”

என்பன அவை.

66

இன்னும்,

'முகமன் பகர்பவர்க் கின்னல்மிக் கீந்து முருடரென அகமிஞ்சு வாருக்கு வேண்டியவா செய்யும்

என்றும்,

66

ஒவ்வோர் கொடுநீதியுண்டாக்கித் துன்பமென் கண்காணச் செய்திடும்”

(54)

என்றும் ஆங்கிலியரின் இரட்டைப் போக்கையும் பன்மைப் போக்கையும் பகர்கின்றார்.

வரிக்கொடுமை

ஆங்கிலியர் ஆட்சியில் வறு நிலத்துக்கும் வரியாம். நாய்க் கும் வரியாம்; கழுதைக்கும் வரியாம்; கலங்கியுரைக்கின்றார்

அடிகளார்!

“வித்துமிடாச் செய்த்தலைத் தீர்வைப்பகுதி கொள்வர்”

(29)

“கடிநாய்க்கும் தீர்வைப் பணங் கொள்ளும் வஞ்சக்கயவர்

(73)

“ஈனமலியும் கழுதைக்கும் நாய்க்கும் இறைகொளற்கு மானம் அணுவள வேனுமில் லாக்கொடு வஞ்சகர்”

(76)

இயற்கையும் மாறுதல்

ஆங்கிலியர் கொடுமையால் இயற்கையின் இயல்பும் மாறிவிட்டதாம். அவர்கள் ஆளும் மண்ணில் மழை பெய்தற்கும் கொண்டல் அச்சங் கொண்டு ஓடுகிறதாம்;

“கொண்டல் கண்டஞ்சும் கொடுங்கோல் நடாத்தும் குணுங்கர்'

அழிந்துபட வேட்டல்

(37)

கொலைக் கொடியராம் ஆங்கிலியர் இப்படி இப்படி அழிய வேண்டும் என்றும் வேட்கையியம்புகிறார் தண்ட பாணியார்;