உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

திருக்கோயில்

இளங்குமரனார் தமிழ் வளம்

16

நினை தோறும் நெஞ்சத்து ஊற்றெடுத்து, மயிர்க்கால்கள் தோறும் உவகை ஓட்டுற்று, உவப்புக்கு ஓரெல்லை ஈதென நிலைபெறுத்தி, நினைப்பவர் மனமே கோயிலாகத் திகழும் திருநூல் திருக்குறளே!

வழிகாட்டி

எந்த வழிகாட்டியும் இணைந்து நின்று செய்யாத அளவில், உள்ளோடு உள்ளாக இ இணைந்து, இடரிலா வழி ஈதெனத் தேர்ந்து, திட்டமாக அழைத்துச் செல்லும் 'வழி காட்டி’ வள்ளுவர் நூலே!

தங்க வயல்

கல்லாஞ் சரளையுள்ளே கட்டித் தங்கம் இருந்ததைக் கண்டதால் கண்ட பயன் கோலார் தங்கவயல்! பொல்லாத வுலகத்துப் புகுந்து பேரருட் பெருக்கால் பெரிதுற ஆய்ந்து கண்ட ஆய்வின் பயன் தங்கத் திருக்குறள்!

ஆறு

எப்பாலும் தேனாறு பாய்ந்தென்ன? எப்பாலும் காலாறு பாய்ந்தென்ன? முப்பாலாம் முழுதாறு பாய்ந்து உளக் கால்களிலெல்லாம் ஊற்றெடுத்துச் செயற்பாடுகளில் எல்லாம் வெள்ளமெனப் பெருக்கெடுத்தால் அல்லவோ வாழ்வு வளமாம்; வையகம் தெய்வகமாம்!

துறையங்காடி

துறைவாரி அங்காடிகள் நகர்தோறும் உண்டு. திருக்குறள் இணையிலாத் துறைவாரியங்காடி. அவரவர் துறைக்கும் தேவைக்கும் வேண்டும் வேண்டும் பொருள்களைத் தேர்ந்து காள்ளலாம்! போற்றிப் பயன் கொள்ளலாம்! பலப்பல இடங்களுக்கு அலைந்து, பலப்பல அங்காடிகளில் ஏறி இறங்க வேண்டிய காலக் கழிவையும் முயற்சிக் கழிவையும் விலக்கி நலமெய்தலாம்.

அமுதசுரபி

அருளாளியாம் ஆபுத்திரன் கை அமுதசுரபி இன்றில்லையோ? அணி மேகலையாம் மணிமேகலையார் கை அமுத சுரபி