உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ் வளம்

16

இன்மை இன்மை

சால்லத் தெரிவதில்லை;

பெருக்கமாகச் சொல்லத் தெரிந்தவர்க்குச், சுருக்கமாகச்

சொல்லத் தெரிவதில்லை;

சுருக்கமாகச் சொல்லத் தெரிந்தவர்க்குப், பெருக்கமாகச்

சொல்லத் தெரிவதில்லை;

இலக்கணம் தெரிந்தவர்க்கு, இலக்கியப் படைப்பு அருமை, லக்கியப் படைப்பர்க்கு, இலக்கணம் அருமை;

பொருள் தெளிவுக்குக், கட்டுப்பாடு மிக்க யாப்பியல் தடை; யாப்புக்கு உட்பட்டவர்க்குச் சொல்லும் சுவையும் இடர்!

இவ்வெல்லா இடர்களும் இன்மைகளும் இல்லாமல் எவரும் வந்து போற்ற வெளிப்பட்ட உலக நூல் திருக்குறள்!

கொடைவளம்

கதையா சுவைக்கலாம்! கற்பனையா நயக்கலாம்! அறவுரையா? “தலைவலி” - என்பாரும், இனிக்க இனிக்கப் படிக்க - படித்துத் தேனாக ஊற்றெடுக்க அவ்வூற்றின்பை உவந்து உவந்து பிறர்க்கு எடுத்து வழங்க அமைந்த அருமை நூல் திருக்குறள்!

ஆ! ஆ! ஆ!

பாட்டனாரின் பழங்கண்ணாடியையும், பாட்டியின் பழம் பட்டையும் பாராட்டிப் பேணிவைக்கும் உலகம்;

தந்தையும் தாயும் தந்த கையகல வீட்டையும், உரிமை கொண்டாடி உவக்கும் உள்ளம்;

அன்பரும் நண்பரும் ஆர்வத்தால் தந்த சிறுபொருளையும், பெரும் பரிசாகப் போற்றிக் காக்கும் நன்மனம்;

உலகெல்லாம் கூட்டுண்டு ஒழுக்கத்தின் தலைமணியாகக் கொள்ளத்தக்க ஒரு நூலாம் திருக்குறளைப் போற்றிக் கொள்கின்றதா? அது பிறந்த மண்ணில் தாமும் பிறந்த பெருமை நினைத்து மகிழ்கின்றதா? அது மலர்ந்த மொழி பேசும் பேற்றை எண்ணிப் பெருமையுறுகின்றதா?