உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவளம்

தமிழ் வளம் - பொருள்

13

நேற்றைச் சோறு, பழையது!

ஆனால் ஈராயிரம்

ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் இன்றும் புதிது! என்றும் புதிது!

சோறு உடலை வளர்க்கும்! திருக்குறள் உணர்வை வளர்க்கும்!

உடலிலாது உணர்வுண்டோ எனலாம். ஆனால் உணர்விலா உடலால் ஆவது என்ன?

நடமாடுதலால் மட்டும் மாந்தராகிவிட முடியுமா? எத்தனை உயிர்கள் நடமாடுகின்றன - தவழ்கின்றன பறக்கின்றன!

3. மறை

-

மறை என்பதற்கு மறைத்து வைக்கப்பட்டது எனப் பொருள் கூறுவது தமிழ் மறையை வடமொழி வேதமாக்கி அதன் அடிப்படையில் பொருள் விரிப்பதாம்.

'வேதம்' ஒரு குலத்துக்கு உரியது என்றும், அக்குலத்தார் ஒழிந்தார் ஓதின், ஓதிய அவர் நாவை அறுக்க வேண்டும் என்றும், சொன்னவர் வாயில் இரும்புக் கம்பியைக் காயவைத்துச் செலுத்துதல் வேண்டும் என்றும், பதிய வைத்துக் கொண்டவர் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்றும், ஓதக்கேட்டவர் செவியில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்றும் ‘மனுநூல்' கூறுவதில் இருந்தே வேதம் குலப்பொருள் என்பதும், ஒருகுலத்துக்கு ஒரு நெறியுரைப்பது என்பதும் வெளிப்படை.

வேதம் பொதுப் பொருள் அன்று என்பதாலேயே எழுதாக் கிளவி' என்றும் ‘கருதி’ என்றும் வழங்கப்பட்டதாம். ஆனால் தமிழில் மறை என்பது பொதுப்பொருள்; எழுதும் கிளவியது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உயிர்க்கும்" என்றும் "கேடில் விழுச் செல்வம் கல்வி” என்றும் கூறும் செய்தி, மறைத்துக் கூறும் செய்தியாமா? ஒரு குலத்துக்கொரு நெறி கூறும் செய்தியாமா?

தமிழில், மொழியியல் காவல் நூலாகக் கிளர்ந்தது தொல்காப்பியம். பண்பாட்டியல் காவல் நூலாகக் கிளர்ந்தது திருக்குறள். வரையறை செய்து கூறும் இலக்கண நூல்களை