உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

இனி, 'மறை' என்பது ‘களவு' என்னும் பொருள் தரும் பழைய ஆட்சி. பிறரறியா வண்ணம் பாதுகாக்கும் காவல் ஒழுக்கமே ‘மறை' எனப்பட்டது அறிக.

ஒரு பொருளைப் பிறர் அறியா வண்ணம் காக்கக் கருதுவார் மறைத்து வைத்தல் காவல் வழிப்பட்டதே என்பதும் எவரும் அறிவர். ஆதலால் 'மறை' என்பது வாழ்வியல் காவல் நூல் என்பதே தெளிந்த செய்தியாம்.

66

4. முப்பால் வைப்பு முறை

உலக உயிர்களின் முதல் தேவை இன்பம் நாடுதல்; அடுத்த தேவை பொருள்; அதற்கடுத்த தேவை அறம் என்று பலரும் கருதியிருந்தனர். தொல்காப்பியரும், ' ன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு' என இன்பத்திற்கு முதலிடம் தந்தார். ஆயின் திருவள்ளுவரோ அறத்திற்கு முதலிடம் தந்து ன்பத்தை மூன்றாமிடத்திற்கு அனுப்பி விட்டார்.'

- என்பது முப்பால் வைப்பு முறைக் கட்டுரையில், நான்காம் பத்தி. இதில், தொல்காப்பியர் இன்பம், பொருள், அறம் என முப்பால் முறைக் கொள்கையர் எனவும், திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என முப்பான்முறைக் கொள்கையர் எனவும் இருவேறாகக் காட்டுதல் ஒன்று!

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பான் முறை வைப்பு வள்ளுவரே படைத்துக் கொண்டது என்றும், தொல்காப்பிய முறையை மாற்றி முதலிடத்தை மூன்றாமிடத்திற்கு அனுப்பி விட்டவர் வள்ளுவரே என்றும் காட்டுதல் மற்றொன்று!

இவற்றுக்கு மேலோட்டப் பார்வை ஒன்றையே அன்றிப் பிறிதொரு சான்றும் இன்றாம்.

தொல்காப்பியர்,

66

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு" என எங்கு எண்ணினார்? களவியல் முதல் நூற்பாவில் எண்ணினார்! அங்கு எண்ணுவானேன்? களவியல், இன்பச் சுரப்பின் வைப்பகம்; இன்ப வளர்வின், நிலைக்களம்; இன்ப முதிர்வால் பொருளும் அறமும் சிறக்கத் தோற்றுவாயாம் இடம்! ஆகலின், அங்கே இன்பத்தை முன் வைத்து எண்ணல் முறைமையாம். இஃதிட நோக்கி இயைத்ததையன்றி வரன் முறையன்றாம்.