உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

17

இன்பம் எனத் தொடங்கியது மரபு மாற்றம் என்பதாலே தான் இளம்பூரணர் ஒரு வினா எழுப்புவதுடன் விடையும் பகர்கின்றார்:

66

‘அறனும், பொருளும், இன்பமும் என்னாது, இன்பமும், பொருளும், அறனும் என்றது என்னை? எனின், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம் இரு வகைப்படும். அவையாவன போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும், அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க” என்பது அது.

நச்சினார்க்கினியர், ‘அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளான் இன்பம் நுகர்தற் சிறப்பானும், அதனான் இல்லறங் கூறலானும், இன்பம் முற்கூறினார்' என்றார்.

முறையை

மாற்றி நூலாசிரியர் கூறியமைக்குரிய கரணியத்தை, உரையாசிரியர்கள் உணர்ந்துரைத்த விளக்கங்கள் இவை.

இனி, 'இலக்கணப் பேராசிரியர் தொல்காப்பியர், அறம், பொருள், இன்பம் என்னும் முறை வைப்பைக் கூறிற்றிலரோ' எனின், ‘கூறினார்' என்க. அக்கூற்றுத்தானும், அவர்க்கும் முந்தையர் கொண்ட கோடா முறைமை என்றுக் குறித்தாரும் என்க :

66

"ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே’

66

அந்நிலை மருங்கின் அறமுத லாகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

இவை செய்யுளியலில் வரும் நூற்பாக்கள். இவற்றுள், அறமுதலாகிய மும்முதற் பொருள்' என்பதையும் ‘என்ப என்பதையும் கருதுக.

அறமுதலாகிய மும்முதற் பொருள்கள் எவை என விளக்கவும் வேண்டுமோ?

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற் பொருட்கும் என உரை வகுக்கின்றார் இளம்பூரணர். இவ்வுரையையே பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் ஏற்று மொழிந்தனர்.