உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

6

இளங்குமரனார் தமிழ் வளம்

16

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளும், ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா என்னும் நாற்பாவாலும் கூறப்படும் என்பது தொல்காப்பியர் குறிப்பாதல் அறிக. அக் குறிக் கொண்டேயும், அவர் குறித்த குறுவெண் பாட்டைக் கொண்டேயும், அறம் முதலாக முப்பால் வகுத்தார் வள்ளுவர் என்க. அவரே, “அறம், பொருள், இன்பம் உயிரச்சம்" (501) என எண்ணுவதையும் அறிக.

முப்பாலார் ஒழிய எப்பாலாரும், முப்பால் முறை வைப்புக் கொண்டிலரோ?

ஆ சிரியர் தொல்காப்பியர்க்கும் முந்துநூல் முன்னவர் முறைமை அஃதெனின், பின்னவர் கொள்வதற்கு என்ன தடை? சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடல் - (28)

66

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும

99

என்கின்றது. இப்பாடலில் வரும் 'ஊதியம்' என்னும் சொல்லுக்கு உரை கூறும் பழைய உரையாசிரியர், "ஊதியம் என்பது அறம், பொருள், இன்பங்களை; அன்றி அறம் என்பாரும் உளர்” என்கிறார். இச் சோழனைப் பற்றிக் கோவூர்கிழார் பாடிய மற்றொரு புறப்பாடல் (31)

“சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல"

என்கின்றது.

சோழன் குடை முன்னே தோன்றுகின்றது, அதனைத் தொடர்ந்து பின்னே சேரன் குடையும் பாண்டியன் குடையும் தோன்றுகின்றன. இக்காட்சி அறத்தின் பின்னே பொருளும் இன்பமும் தோன்றினாற் போன்றது என்பதே இவ்வடிகளின் உவமை விளக்கப் பொருளாம்.

இம்முறைவைப்பின் நிறை வைப்பை அறிந்தமையால் அன்றோ அறன் வலியுறுத்தல் முகப்பெழுதும் பரிமேலழகர், 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம்' என்றார் பிறரும் என்றார்.

இதனால் கூறியது அறம், பொருள், இன்பமெனும் முப் பான்முறை முதுபழந்தமிழ் முறையே என்பதும், அம் முறையே