உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

19

தொல்காப்பியர் உரைத்த முறையென்பதும், அம்முறையே வள்ளுவர் வகுத்துக் கடைப்பிடி முறை என்பதும் தெளிவாம்.

'களவியலில் ஒருவகை முறைவைப்பும், செய்யுளியலில் ஒருவகை முறைவைப்பும் தொல்காப்பியர் கொள்வானேன்?’ என வினவலாம்.

இ னறிதல்’ அறிந்தார் அவ்வாறு வினவார்.

இறைவன் சூடும் கொன்றை மாலையைத் தொகை நூல்கள் இரண்டன் வாழ்த்துப் பாடல்கள், எடுத்த எடுப்பில் மடுத்துரைக்கின்றன. இரண்டு பாடல்களையும் இயற்றியவர் ஒருவரே. அவர் பாரதம் பாடிய பெருந் தேவனார்.

ஒன்று, “கண்ணி கார் நறுங்கொன்றை” என்கின்றது. மற்றொன்று "கார் விரி கொன்றை” என்கின்றது.

‘வாளா’ உரைத்த உரைமுறையோ இவை?

முன்னது, புறப்பாடல்

பின்னது, அகப்பாடல்.

முன்னது, போர் முதன்மையது.

பின்னது, காதல் முதன்மையது,

முன்னது, போர்ப்பூவாம் கண்ணி.

பின்னது, முல்லைக் கற்பின் பெரும் பொழுதாம் கார் காலம். ஒரு பூவையே இடமறிந்து முறையறிந்து பாடவல்ல மூத்த புலமையர், முப்பொருள் முறைமையின், 'வைப்பியல் தெரியாமல் எய்ப்பரோ' என்பது தெளிக.

5. மரபுவழி உரை விளக்கம் அ

அவையறிதல் அவையஞ்சாமை என்பன திருக்குறள் பொருட்பாலில் உள்ள ஈரதிகாரங்கள். அறத்துப்பாலில் உள்ளது மக்கட்பேறு. இரண்டையும் இணைத்து மரபு வழி உரைகாணின் சில விளக்கங்கள் கிடைக்க வாய்ப்பாம்.

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்”

என்னும் குறள் அறியார், அரியர். பள்ளிப்பாடம் முதல், பல்கலைக் கழகப் பொழிவு வரை இடம் பெறும் குறள்களுள் ஈதொன்று. இதில் வரும் அவையத்தை ஆய்தல் வேண்டும்.