உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ் வளம் 16

தொல்காப்பிய அரங்கேற்றம் ஓர் அவையத்தின்கண் நிகழ்ந்த செய்தியை அதன் பாயிரம் குறிக்கிறது. அவ்வவையம், நிலந்தரு திருவிற்பாண்டியன், அவையம் எனப்படுகின்றது. பழநாளில் அளவுகோல், நிறைகோல், முகத்தலளவைக் கருவிகள் இன்ன, ஆளும் வேந்தன் பெயரால் வழங்கப்பட்டன என்பதைத் தமிழ் வரலாற்றுலகம் நன்கு அறியும். அவையமும் வேந்தன் பெயரால் அமைதலுண்டு என்பதைத் தொல்காப்பியப் பாயிரத்தின் வழியே அறியலாம்.

அவையம் என்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் கூடியிருந்து ஆய்ந்த பேரவையே என்பது விளக்கமாகும் செய்தி. ஏனெனில், அவையம் நூலை ‘அரில் தப் (குற்றம் நீங்க)த் தெரிந்த செய்தியையும் அப்பாயிரமே குறிக்கின்றது. புலவர்கள் ஒருமனப்பட்டுச் சேர்ந்து ஆய்ந்தமையால். ‘புணர்கூட்டு' என்றும் ‘கூடல்’ என்றும் பெயர் பெற்றது.

புலவர்கள், தம்மைப் பாடாமை தமக்கோர் இழிவாமென எண்ணி முடிவேந்தரும், அதற்கு முழுத்தகுதியாம் சான்றாண்மைப் புலவர்களும் ஒருங்கிருந்து ஆராய்ந்த காலவியற் பேறு அது. புலவர்களால் பாடு புகழ் பெற்றவரே, வீடுபேறும் உற்றவர் என்பதும் அந்நாள் கருத்தாக இருந்தது. புலவரொருவர் தன்னைத் தழுவாமையைத் தன் குறைபாட்டுக்கு அடையாளமாகக் கொண்டு வருந்திய, மன்னவன் உரையும், புறப்பாடலில் உண்டு. ஆகலின், புலவர் அவையத்து அல்லது சான்றோர் அவையத்து முந்தியிருப்பச் செய்தலே, ஒரு தந்தையின் தலையாய கடனெனப் பண்டைத் தமிழுலகம் கொண்டிருந்த குறிக்கோள் வாழ்வின் தூண்டுதலே குறிப்புச் சுட்டாகக் குறள்வழி இப்பாடலாக வெளிப்பட்டதெனக் கொள்ள வாய்க்கின்றது.

இந்நாளில் இராசராசன் பரிசு பெறுதலும், சாகித்திய அகாதெமி பரிசு பெறுதலும், கின்னல் புத்தகத்து இடம்பெறுதலும், ஒலிம்பிக்கு ஆட்டத்தில் பொற்பதக்கம் பெறுதலும், இராயல் கழகத்தில் உறுப்பாண்மை பெறுதலும், நோபல் பரிசு பெறுதலுமென, அந்நாள் தமிழுலகம் புலவர் அவையத்து டம் பெறுதலைப் பேரளவு கோலாக - குறிக்கோள் அளவாகக் கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். இது மரபு வழி ஆய்வுப்

பயனாம்.

சங்கப் புலவர்களைச் சான்றோர் எனல் பெருவழக்கு. உரையாசிரியர்கள் பலரும் சங்கப் புலவர்களைச் சங்கச்

-