உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

21

சான்றோர்கள் என்றே குறித்தனர். அவர்களுக்குப் பின் வந்த புலவர்களைப் பிற்காலச் சான்றோர் என்றும் பிற்சான்றோர் என்றும் குறித்தனர். இத்தகையர் சங்கஞ் சார்ந்த காலத்தவர் என்பதும் அறியத்தக்கது.

சங்கப் புலவர்களை அன்றி வீரப் பெருமக்களையும் சான்றோர் என்று வழங்கும் வழக்கம் உண்மை சங்க நூல்களாலும் உரைகளாலும் விளங்குகின்றது. பெரும் புலமை நிறைவும், பெருமிதப் பெருக்கும் ஆகிய நிறைவே சால்பெனப் பொதுச் சுட்டாக வழங்கியதென்பது இதனால் இனிது விளங்கும். இதனையும் அவையத்துடன் இணைத்துப் பார்த்தல் வேண்டும். உரைத்த

சான்றாண்மையைப்

பொருட்பாலிலே

வள்ளுவர், அறத்துப்பால் மக்கட்பேற்றிலே.

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்கிறார். ‘அவையம்’ ‘சான்றோன்' என்னும் சொற்கள் வழியே சங்கநாளில் வாழ்ந்தவர் வள்ளுவர் என்னும் குறிப்பு வெளிப் படும். இக்குறள்களின் உள்ளுறையாம் சிறப்புப் பொருளும் தெளிவுறும்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்'

என்னும் குறள் ஆய்வாளரிடத்தெல்லாம் உலாவரல் வெளிப் படை. நம்பா மதத்தரும் இதனை எடுத்துப் பாரித்து விளக்கு தலும் கண்கூடு. 'கடவுள் கெடுக' எனச் சாவிக்கிறாரே வள்ளுவர்; விட்டு விடலாமா?

தமிழ்மரபு தனிச் சிறப்பினது. பானை வனைதலையோ, துணி நெய்தலையோ, யாழ் மீட்டுதலையோ, ஏர் உழுதலையோ 'இயற்றுதல்' என்று கூறாது. அதற்கு அதற்கென அமைந்த மரபு வழியே கூறும். கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி, ஆவின் கன்று என்பது போல் கூறுவதையன்றி இளமைப் பெயர்கள் அனைத்தையும் ‘குஞ்சு' என்றோ ‘குட்டி' என்றோ, ‘கன்று’ என்றோ கூறி விடுவது இல்லை. “இதனை இவ்வாறு சொல்ல வேண்டும் என்னும் மரபு” கல்லாரிடையும் மாறாமல் வழங்கி வருகின்றது. அவ்வாறாகவும் இக்குறளில் மரபுநிலை திரிய உரை ஏறி நிற்பதாயிற்று.