உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

62.

63.

64.

65.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

துன்புற வாழாத் தூநெறி யாளர்

அறிவ தறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழு 'மியல்புடையா ரெஞ்ஞான்றுந் துன்புற்று வாழ்த லரிது.

முட்டிலா வுரவோன் மட்டிலாச் செல்வன் கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமே லஃதென்ப பட்டினம் பெற்ற கலம்.

-நாலடியார் 74, 250

உரனுடை யாரை உருத்தும் நோய்கள்

விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு.

தீராத் தீமையைத் தேடித் தருபவை

2நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலுஞ் - சீர்பயவாத் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில.

-திரிகடுகம் 44, 63

பிறர்துயர் களைதலே பேருடற் பயனாம்

66. கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லார் அற்றவ ரந்த ணாள ரன்றியு 'மனைய நீரார்க்

குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயிற் பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறும்பய னில்லை மன்னோ.

1. இயல்பினா.

2. கோலஞ்சா.

3. மலர்கள் போல்வார்க்.

சூளாமணி 774