உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

70.

71.

72.

73.

74.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கற்புடை இல்லாள் கனிந்ததே இல்லம் நாலாறு மாறாய் நனிசிறிதா யெப்புறனு மேலாறு மேலுறை சோரினு - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பின் இல்லா 'ளமைந்ததே யில்.

மாண்பிலாள் வீடு வீண்புதர்க் காடு

மழைதிளைக்கு மாடமாய் 'மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றிமைப்பி னென்னாம் - விழைதக்க மாண்ட மனையாளை யில்லாதா னில்லகங்

காண்டற் கரியதோர் காடு.

-நாலடியார் 384, 383, 361.

ஈயாச் செல்வம் பூவாப் புகழே

கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி ஒல்லும் வகையால் விருந்தோம்பிச் - செல்லுந்தம் இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப் புற்செல்வம் பூவாப் புகழ்.

நாணே நற்றுணை நங்கையர் தமக்கு கொய்தார மார்பிற் கொழுநன் தணந்தபின் பெய்வளை யாட்குப் பிறிதில்லை - வெய்ய வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணை நாண்.

-பு.

வெ.279,278

கற்புடை மனைவியே நட்பொடு நற்றாய்

நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றுங் கற்புடையாள் பூண்ட கடன்.

1. ளமர்ந்ததே.

2. மாண்டமைந்த.

-திரிகடுகம் 64