உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75.

புறத்திரட்டு

ஆண்மகன் போற்றும் அரும்பெறல் இல்லாள் வழிபா டுடையளாய் வாழ்க்கை நடாஅய் 'முளியாது சொல்லிற்றுச் செய்தாங் கெதிருரையா தேத்திப் பணியுமே லில்லாளை யாண்மகனும் போற்றிப் புனையும் புரிந்து.

87

-அறநெறிச்சாரம் 161

தலைவனைக் காக்கும் தகைமையள் இல்லாள்

76. மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை ஒக்க வுடனுறைத் லூணமைவு - தொக்க அலவலை "யல்லாதாட் கைந்திவை கண்டீர் தலைமகனைத் தாழ்க்கு மருந்து.

- சிறுபஞ்சமூலம் 52

குறிப்பறிந் தொழுகுதல் கொண்டவள் கடனே 77. எப்பணியா லின்புறுவர் காதலரக் காதலரை அப்பணியா லப்பொழுதே 'யன்புறுத்தி - ஒப்ப மனங்குழையும் வண்ண மகிழ்விப்ப தன்றே கனங்குழையார் தங்கள் கடன்.

78.

பலர்புகழ் பெருமை பத்தினிக் குரித்தே

நாடு மூரும் நனிபுகழ்ந் தேத்தலும்

4பீடு றுபமழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லது கூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே.

-பாரதம்

2. யல்லாமை பெண் மகளிர்க் கைந்துந்.

1. முனியாது.

3. யின்புறுத்தி.

4. நீடு மாமழை.

வளையாபதி 7