உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

87.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உறுதிப்பாடிலார் தகுதிப்பா டுரையார்

பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்க உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும் எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போல் மெலிந்துபின் னிற்கு

மன்றே

-சீவகசிந்தாமணி 1597

அசைந்திடும் உள்ளம் இசைந்திடும் பன்னெறி

88.

பள்ள முதுநீர்ப பழகினு மீனினம்

வெள்ளம் புதியது காணின் 'விருப்புறூஉம்

89.

90.

91.

1. விரும்புறும்.

கள்ளவிழ் கோதையர் காமனொ டாயினும் உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ.

தாவும் உளத்தரை யாவரே காப்பார் உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே.

அலைந்திடு முளத்தை யளப்பவர் எவரே எத்துணை யாற்று ளிடுமணல் நீர்த்துளி புற்பனி யுக்க மரத்திலை நுண்மயிர் அத்துணை யும்பிற ரஞ்சொலி னார்மனம் புக்கன மென்று பொதியறைப் பட்டார்.

ஓடும் உள்ளம் தாமரை இலைநீர்

தளிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேல் வளிப்பெறு மாத்திரை நின்றற் றொருவன் அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால் துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார்.

வளையாபதி 1

வளையாபதி 9, 10, 11