உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

9. புதல்வரைப் பெறுதல்

91

(மங்கலமாகத் திகழும் மனையறம் சிறத்தற்கு நன்கலமாகத் திகழும் மக்களைப் பெறுதல். மக்கட்பேறு என்பதும் இது.

இ.பெ.அ: திருக். 7 (பரிமே.) மணக். (மக்கட்பேறு) ப.பா.தி. 12. நீதிக். 39.)

92.

93.

94.

தந்தை தளர்ந்திடின் மைந்தன் போக்குக

சிதலை தினப்பட்ட வால மரத்தை

மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்

குதலைமை தந்தைக்கட் டோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்.

நன்மகப் பேறே பன்னரு மின்பம்

-நாலடியார் 197

கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப் பெருங்கட் புதல்வன் பிறப்பப் - பெரும்பெயர் 'விண்ணோர் மகிழ்ந்தார் வியலிடத்தா ரேத்தினார் எண்ணா ரவிந்தா ரிகல்.

-புறப்பொருள் வெண்பாமாலை 211

தக்க மைந்தனேல் தந்தையும் வணங்குவான்

எந்நெறி யாலு மிறைவன்றன் மக்களைச்

செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி மான்சேர்ந்த நோக்கினா யாங்க வணங்காகுந் தான்செய்த பாவை தனக்கு.

-பழமொழி 331

புதல்வரைப் பெற்றதே பொலிந்திடு மில்லம்

95. தொக்கிள மலர்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை 'நகாத பொய்கையும் மிக்கிளம் ’பிறைவிரி விலாத வந்தியும் மக்களை “யிலாததோர் மனையு மொக்குமே.

1. விண்ணார்மலிந்தார்.

2. யிலாத. 3. பிறைவிசும்பிலாத.

4. யிலாதவர்.