உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறத்திரட்டு

10. விருந்தோம்பல்

93

(விருந்து - புதுமை. புதியராக வந்தாரைப் பேணுதல். விருந்து - புதுமை; அஃது ஈண்டுப் புதியராய் வந்தார்மேல் நிற்றலால் பண்பாகு பெயர்” - திருக். 43. நாகை. சொ. தாண்ட.

100.

101.

பெ.அ: திருக். 9. ப.பா.தி. 9. நீதிக். 44.) வன்சொற் களைந்து வருவிருந் தோம்புக

இன்சொ லளாவ லிடமினி தூண் 'யார்யார்க்கும் வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல் முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் நாளும் விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து.

விருந்தில் முதன்மை விழுமிய முறுவல்

முறுவ லினிதுரை கானீர் மணைபாய்

-ஏலாதி 7

கிடக்கையொ டிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்

கூணொடு செய்யுஞ் சிறப்பு.

-ஆசாரக்கோவை 54

விருந்தெனும் வேள்வி வென்றியோ டிலங்குக

102. நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகில்

103.

ஒன்ற வுயிர்தளிர்ப்ப வோம்பலால் - வென்றமருள் வாள்வினை நீக்கி வருக விருந்தென்னும் ஆள்வினை வேள்வி யவன்.

-புறப்பொருள் வெண்பாமாலை: 215

விருந்துளே அடக்கமாம் வேள்வியுங் கூட

யாறு ளடங்குங் குளமுள வீறுசால்

மன்னர் விழையுங் குடியுள தொல்மரபின் வேத முறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோ டொப்பவுள.

1. யாவர்க்கும்.

-நான்மணிக்கடிகை 52