உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

சீறா உரையான் மாறாப் புகழாள்

107. சிதைவுரையான் செற்ற முரையான்சீ 'றில்லான் இயல்புரையா னீன முரையான் - நசையார்க்குங் கூடுவ தீவானைக் கொவ்வைபோற் செவ்வாயாய் நாடுவர் விண்ணோர் நயந்து.

108.

இன்னா முகத்தன் துன்னான் நலமே மலர்ந்தமுகத் தானு 3மதுரவுரை யானும் நலந்தந் திடுவர்கள் நல்லோர் - புலந்திருந்த இன்னா முகத்தா னருளா திடும்பொருள் தன்னாற் பயணுண்டோ தான்.

12. செய்ந்நன்றி யறிதல்

95

-ஏலாதி 34

-பாரதம்

99

(“பிறர்செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை மணக். “தனக்குப்பிறர் செய்த நன்மையை மறவாமை பரிமே.

-

இ பெ.அ: திருக். 11. ப.பா.தி.18. இ.சா.அ : நீதிக். 47

(நன்றியறிதல்))

109.

110.

திருக்.11.ப.பா.தி.18

நன்றி யறிதல் ஒன்றிரண் டாக்கம்

நன்கொன் றறிபவர் நாழி கொடுப்பவர்க் கென்று முறுதியே சூழ்க வெறிதிரை

சென்றுலாஞ் சேர்ப்ப வதுபோல நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிக மில்.

செய்தற்கு குவவார் எய்திய திழவு தமராலுந் தம்மாலு முற்றாலொன் றாற்றி நிகராகச் சென்றாரு மல்லர் - இவர்திரை நீத்தநீர்த் தண்சேர்ப்ப செய்த துவவாதார்க் கீத்ததை யெல்லா மிழவு.

1. சீரில்லார்.

2. நசையவர்க்குக்.

பழமொழி 344, 226

3. மதுரமொழி.