உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

125.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அறிந்தோர் நாவில் அடக்கம் மல்கும் கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும். பச்சோலைக் கில்லை யொலி.

-நாலடியார் 242, 256

126.

மூவகை அடக்கமே மேவருந் துறக்கம்

வாயி னடங்குதல் துப்புரவா மாசற்ற

செய்கை யடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும்

வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.

நெஞ்சம் அடங்குதல் விஞ்சிய பேறு

-திரிகடுகம் 43

127. தன்னைத்தன் னெஞ்சங் கரியாகத் தானடங்கிற் பின்னைத்தா 'னெய்தாப் பயனில்லை - தன்னைக் 2குடிகெடுக்கு நெஞ்சிற்குக் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப் பட்ட களிறு.

3

அற்றது நெஞ்செனில் உற்றது வீடு

128. நின்னை யறப்பெறு கிற்கிலெ னன்நெஞ்சே பின்னையான் யாரைப் பெறுகிற்பென் - நின்னை அறப்பெறு கிற்பெனேற் பெற்றேன்மற் றீண்டே துறக்கந் திறப்பதோர் தாழ்.

அறிவுக் கயிற்றால் ஐம்புலன் தளைக

129. இந்திரியக் குஞ்சரத்தை ஞான விருங்கயிற்றாற் 4சிந்தனைத்தூண் பூட்டித் திதிபெறப் – பந்திப்பார் இம்மைப் 'புகழு மினிச்செல் கதிப்பயனுந் தம்மைத் தலைப்படுத்து வார்.

-அறநெறிச்சாரம் 141, 143, 190

2. குடிகெடுக்குந்தீநெஞ்சின்.

1. னெய்தா நலனில்லைத்.

4. சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே.

5. பயனு.

3. செய்யிற்