உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தத்தம் தகுதியைத் தாமே சொல்பவை 139. உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கு நிலைமைக்கு மாண்மைக்குங் கல்விக்குந் தத்தங் குடிமைக்குந் தக்க செயல்.

தனியே செல்லத் தகாத இடங்கள்

140. பாழ்மனையுந் தேவ குலமுஞ் சுடுகாடும் ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந் தாமே தமியர் புகாஅர் பகல்வளரார் நோயின்மை வேண்டு பவர்.

141.

142.

143.

ஒதுங்கிப் போதற் குரைத்த இடங்கள் பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தா ரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட் காற்ற வழிவிலங்கி னாரே 'பிறப்பினுட் போற்றி யெனப்படு வார்.

அறிவினை அழிக்கும் ஐம்புலக் குறும்பு ஈன்றாள் மகடன் னுடன்பிறந்தா ளாயினுஞ் சான்றோர் தமித்தா வுறையற்க வைம்புலனும் தாங்கற் கரிதாக லான்.

2

விதிமுறை விலக்குக் குரிமை யுடையோர் அறியாத தேயத்தா னாதுலன் மூத்தான் இளையா னுயிரிழந்தா னஞ்சினா னுண்டான் அரசர் தொழிறலை வைத்தான் மணாளனென் றொன்பதின்மர் கண்டீ ருரைக்குங்கா லாற்றவும் ஆசாரம் வீடுபெற் றார்.

103

ஆசாரக்கோவை 43, 49, 57, 64, 65, 100

1. பிறப்பிடைப்.

2. னுண்பான்.