உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

144.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மூத்தவர் முன்னர் முறைகெட வேண்டா

நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்

பகையொடு பாட்டுரையென் றைந்துந் - தொகையொடு

மூத்தா ரிருந்துழி வேண்டார் முதுநூலுள்

'யாத்தா ரறிவின ராய்ந்து.

செம்மை போற்றுவார் செய்யத் தகாதவை

145. தொழீஇ யடவுண்ணார் தோழரிற் றுஞ்சார் வழிஇப் பிறர்பொருள் வௌவார் - கெழீஇக் கலந்தபிற் கீழ்காணார் காணாய் மடவாய்

புலந்தபிற் போற்றார் புலை.

-சிறுபஞ்சமூலம் 85, 38

-

குறையிலா உள்ளம் நிறைபெருந் தீர்த்தம்

146. அருளுடைமை கொல்லாமை யைந்தடக்கல் வாய்மை இருளடையாக் கல்வியோ டீகை - புரையில்லா உள்ளத்திற் றீர்த்த மிவையுளவா கப்பெற்றால் வெள்ளத்திற் றீர்த்த மிகை

நீர்மிகிற் சிறையிலை ஊர்மிகிற் கரியிலை

147. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்துந் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையால் ஊர்மிகி னில்லை 2கரியே ஒலித்துடன் நீர்மிகி னில்லை சிறை.

16. பிறர்மனை நயவாமை

-பழமொழி

-பழமொழி 335

“வேட்கை மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை

  • நாகை. சொ. தண்ட.

3. ஆர்த்த வறிவின; யாத்தாரறிந்தவ. 146. பழமொழியில் இப்பாடல் இல்லை. 2. கரியோ.