உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கூர்த்தின்னா செய்யினும் பேர்த்தின்னா செய்யேல்

162.

163.

164.

165.

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்றாமை யென்னா ரறிவுடையார்-ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று.

ஒறுக்க வல்லவன் பொறுப்பதே பொறுமை இளையா னடக்க மடக்கங் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்-எல்லாம் ஒறுக்கு மதுகை யுரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை.

தைக்கச் சொல்லினும் தயையால் பொறுக்க

கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச் சொல் எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லை இடுநீற்றாற் பையவிந்த நாகம்போற் றத்தங் குடிமையான் வாதிக்கப் பட்டு.

ஆய்ந்தமை கேள்வியர் காய்ந்துரை செய்யார்

காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே

ஆய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

சான்றோர் வெகுளி சடுதியிற் றணியும்

166. நெடுங்கால மோடினும் நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெம்மைபோற் றானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம்.

ஓங்கிய குடியினர் தீங்கினை ஊக்கார்

167. உபகாரஞ் செய்ததனை யோராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரந்