உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தாஞ்செய்வ தல்லாற் 'றவற்றினாற் றீங்கூக்கல்

வான்றோய் குடிப்பிறந்தார்க்கில்.

109

-நாலடியார் 67, 65, 66, 63, 68, 69

அறிவுநீர் தெளித்தால் அணைந்திடும் சொற்றீ

168. எள்ளிப் பிறருரைக்கு மின்னாச்சொல் தன்னெஞ்சிற் கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும் - மெள்ள அறிவென்னு நீரா ~லவித்தடக்க லாற்றிற் பிறிதொன்று வேண்டா தவம்.

169.

அறநெறிச்சாரம் 81

புன்மை யனைத்தும் பொறுமையால் மறைந்திடும்

அற்றவுறுப் பெல்லா மறுவையி னான்மறைப்ப மற்றொருவர் காணா மறையுமால் - வெற்றி அறையார் கழலா யவமாய வெல்லாம்

பொறையான் மறைக்குமேற் போம்.

-பாரதம்

18. வெஃகாமை

("பிறர் பொருளை விரும்பாமை” - மணக். “பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை - பரிமே.

இ. பெ.அ: திருக். 18.)

99

-

அடைக்கலப் பொருளைத் தடையிலா தளிக்க 170. உள்ள தொருவ ரொருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கதாங் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி.

1. றவத்தினாற்.

2. லவித்தொழுக.