உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

188.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தாழ்ந்த குடியிலும் தக்கோர் பிறக்கலாம்

கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுட் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி.

- நான்மணிக்கடிகை 4

அறிந்தோர் எல்லாம் அறிந்தோர் அல்லர் 189. 'பலகற்றேம் யாமென்று தற்புகழ வேண்டா அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் கீகாக்கும் சிலகற்றார் கண்ணு 3முளவாம் பலகற்றார்க் கச்சாணி யன்னதோர் சொல்.

-அறநெறிச்சாரம் 79

நாவிற் கழிவு நயனிலாச் சொல்லே

190. சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை.

22. தீவினை யச்சம்

-சிறுபஞ்சமூலம் 11

(“தீய செய்தற்கு அஞ்சுவது” – நாகை சொ. தண்ட.

இ. பெ.அ: திருக். 21. நாலடி. 13. நீதிக். 8)

காணார் எனச் செயேல் மாணா வினைகள்

191. எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனுங் காணா ரெனச் செய்யார் மாணா வினை.

1. பலகற்றோம்.

2. (ந்) தாங்கும்.

3. முளவே.

-பழமொழி 102