உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இல்லாளைக் காதலித்தான் இந்நால்வர் வெந்நரகத் 'தல்லா லழுந்தா தவர்.

அறக்கொலை ஆவது அறவோர் கொலையே

197. 2அற்றங்கள் பார்த்தங் கடைத்திருந்து 'சொல்வரனுங் குற்றம்போய்க் கோவுக் குரைப்பானுஞ் - செற்றத்தே நின்றானுஞ் செய்ந்நன்றி நீத்தானும் அந்தணரைக் கொன்றாரோ டொப்பர் குறித்து.

சிற்றினம் சேர்தல் முற்றிய கேடே

198. பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும் வையன் மின்வடி வல்லன சொல்லிநீர் உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட் செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்.

199.

கொலையும் கொள்ளையும் கூடா தொழிக.

கள்ளன் மின்கள வாயின் யாவையும் கொள்ளன் மின்கொலை கூடி வருமறம் எள்ளன் மின்னில ரென்றெண்ணி யாரையும் நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.

-பாரதம்

-வளையாபதி 16, 17

இடும்பை நோய்கட் கிரையாய் அமைவோர்

200. குழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர் நிழற்றிகழ் வேலி னானை நேடிய நெடுங்க ணாளும் 'பிழைப்பிலாட் புறந்தந்தானுங் கரவரைப் பேணல் செய்யா திழுக்கினா ரிவர்கள் கண்டாயிடும்பைநோய்க் கிரைக ளாவார். குட்ட நோயிற் குளிப்பதற் காவோர்

201. நட்பிடைக் குய்யம் வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டழற் காமத் தீயிற் கன்னியைக் கலக்கி னானும்

1. தல்லழுந்து மவர். 2. குற்றங்கள்.

3. கொல்வானுங்.

4. பிழைப்பிலார்ப்.