உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ் வளம் 17

(“அறநெறியான்

23. தானம்

வந்த

பொருள்களைத் தக்கார்க்கு

உவகையோடும் கொடுத்தல்” - பரிமே. திருக்.19)

ஈகை வகையின் இயல்பு கூறுதல்

206. அச்சமே யாயுங்கால் நன்மை யறத்தொடு கச்சமில் கைம்மா 'றருளைந்தால் - மெச்சிய தோகை மயிலன்ன சாயலாய் தூற்றுங்கால் ஈகை வகையி னியல்பு.

ஈந்தால் ஐந்தை எய்தும் கோடி

207. கைம்மாறு மச்சமுங் காணிற் பயமின்மை பொய்ம்மாறு நன்மை சிறுபய - மெய்ம்மா றருள்கூடி யாரறத்தொ டைந்தியைந் தீயிற் பொருள்கோடி பெய்தல் புகன்று.

இசைநோக் கீகை கூலிக் குழைப்பு

-சிறுபஞ்சமூலம்

208. பயனோக்கா தாற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி யீகின்றா ரீகை - வயமாப்போல் ஆலித்துப் பாயு மலைகடற் றண்சேர்ப்ப

கூலிக்குச் செய்துண்ணு மாறு.

நாடொறும் ஈந்தால் கோடென ஓங்கும்

-பழமொழி 383

209. இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோற் பைய நிறைத்து விடும்.

1. றெனவைந்தால். 206, 207, இச்செய்யுட்கள் சிறுபஞ்சமூலப் பதிப்புக்களிற் காணப் பெறவில்லை.

2. க்குற்றுண்ணு.