உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210.

211.

புறத்திரட்டு

மூட்டா அடுப்பினர் கேட்டை ஒழிக்க இம்மி யரிசித் துணையானும் வைகலும் நம்மி லியைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத் தடாஅ வடுப்பி னவர்.

தக்கார் கைப்படின் மிக்கதாம் சீறறம்

உறக்குந் துணையதோர ாலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் - 'கறப்பயனும் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.

119

-நாலடியார் 99, 94, 28

அறக்கதிர் ஈனும் அரும்பயிர் செய்க

212. இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி 2அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்பதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்.

213.

214.

ஈவார்க் கிணையாம் கருமிகள் இல்லை

ஈவாரி னில்லை யுலோப ருலகத்தில்

யாவருங் கொள்ளாத வாறெண்ணி - 3மேவரிய மற்றுடம்பு கொள்ளும் 4பொழுதோர்ந்து தம்முடைமை பற்று விடுத லிலர்.

இரப்பார்க் கிணையாம் வண்மையர் இல்லை

பரப்புநீர் ‘வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம் இரப்பவரின் வள்ளல்க ளில்லை - இரப்பவர் இம்மைப் °பயனு மினிச்செல் கதிப்பயனும் 'கொண்மி னெனக் கொடுத்த லால்.

-அறநெறிச்சாரம் 16, 182, 178

1. கறப்பயன். 2. அன்புநீ ராக அறப்பைங்கூ ழாக்குவார்க் கென்று மிடும்பை யில. 3. மேவர.

4. பொழுதுந் தமதுடைமை.

5. வையகத்துப் 6. புகழு- 7. தம்மைத் தலைப்படுத்த.