உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் 17

சோற்றுக் கொடையே ஆற்றவும் பெரிதாம் 215. துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்த தெற்றுக்கஃ தென்னி னிதுவதன் காரணம் அற்றமில் தான மெனைப்பல வாயினுந் துற்றவி ழொவ்வாத் துணிவென்னு மாறே.

பதித்துயர் களைவோர் பாராள் செல்வர்

216. கடைநின் 'றவருறு கண்கண் டிரங்கி

உடையதம் மாற்றலி னுண்டி கொடுத்தோர் படைகெழு தானையர் பல்களி யானைக் குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே.

வளையாபதி 18

-சூளாமணி 1998

24. ஈகை

(“வறியராய்த் தன்மாட்டு வந்து இல்லை என்று இரந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்துப் பொதுவின் அவர் வறுமைப் பிணி தீர்த்தலையும், சிறப்பின் அவர் பசிப்பிணி தீர்த்தலையும் கருதிற்று - நாகை. சொ.தண்ட.

இ.பெ.அ: திருச். 23. நாலடி. 10. பழமொழி. 33 ப.பா.தி. 7. நீதிக். 48.)

217.

இறைத்திடு போழ்தெலாம் நிறைத்திடும் ஊற்று

இரப்பவர்க் கீயக் குறைபடுமென் றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற் றுறைத்தோணி நின்றுலாந் தூங்குநீர்ச் சேர்ப்ப இறைத்தோறு மூறுங் கிணறு.

1. றிரந்தவர்.

2. கொடுப்போர்.