உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வறுமை தொலைக்க வழிவகை காண்க 218. கரப்புடையார் வைத்த கடையு முதவா துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல் 'சுரத்திடைப் பெய்த பெயல்.

கொடுப்பதால் ஏழ்மை கொண்டவர் இல்லை

219. அடுத்தொன் 'றிரந்தாற்கொன் றீந்தானைக் கொண்டான் படுத்தேழை யாமென்று போகினும் போக 3அடுத்தேற லைம்பாலா யாவர்க்கே யானுங் கொடுத்தேழை யாயினா ரில்.

அறிமடம் கூடச் சான்றோர்க் கணியாம்

220. முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையுந் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப

221.

அறிமடமுஞ் சான்றோர்க் கணி.

நீர்வரை நீர்மலர்; சீர்வரை செய்கை

இரவலர் தம்வரிசை யென்பார் மடவார் கரவலராய்க் கைவண்மை பூண்ட - புரவலர் சீர்வரைய வாகுமாஞ் செய்கை 'சிறந்தனைத்தும் நீர்வரைய வாநீர் மலர்.

121

பழமொழி 378, 373, 377, 74, 379

செய்வன தவிர்த் திடின் உய்திடா துலகு 222. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணு முலகஞ் செயற்பால செய்யா விடினும் - ‘கயற்புலால் புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப என்னை யுலகுய்யு மாறு.

1. சுரத்திடைத் தீரப்.

3. அடுத்தற.

2. றிரந்தார்க்கொன் றீந்தாரைக் கொண்டார்.

4. சிறந்தெனைத்து.

5. கயப்புலால்.