உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

223.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஆற்றார்க் கீயும் அருமையே ஆண்கடன்

ஏற்றகை மாற்றாமை யென்னானுந் 'தாம்வரையா தாற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின் மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகட னென்னும் பெயர்த்து.

கொடையுடை யாளருக் கடைபடா வீடு 224. இல்லா விடத்து மியைந்த வளவீனால் உள்ள விடம்போற் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க் கடையாவா மாண்டைக் கதவு.

சேரும் வினையால் சேர்ந்திடும் செல்வம் 225. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் 3கொடுத்துத்தற் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்.

நல்லோர் செல்வம் நடுவூர் நற்பனை

226.நடுவூருள் 4வேதிகை சுற்றுக்கோட் புக்க

படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்

குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டு ளேற்றைப் பனை.

-நாலடியார் 97, 98, 91, 93, 96

இரப்போரை இகழார் எங்கணும் இல்லை

227. நூற்றுவரிற் றோன்றுந் தறுகண்ண ராயிரவ ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கு மகன்றோன்றுந் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினு மில்லை இரப்பாரை யெள்ளா மகன்.

2. குணனுடை. 3. கொடுத்துத்தான்.

-தகடூர் யாத்திரை

1. தம்வரையா.

4. வேதிகைச்.

5. ளேற்றுப்.