உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஒளிப்பதும் அளிப்பதும் ஒப்புடைச் செய்கையோ? 228. மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மோரினமாப் 'பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரு மக்களா 2மொல்லுவ தாங்கே அளிப்பாரு மக்களா மாறு.

123

-பெரும்பொருள் விளக்கம்

ஈந்தவர் என்றும் இருந்தவர் ஆவார்

229. மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா தேந்திய கைக்கொ டிரந்தவ ரெந்தாய் வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேனும் ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே.

-

ராமா. பால. 447

துய்ப்பே மெனினே தப்புந பலவே

230. தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் 3உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவு மெல்லா மோரொக் கும்மே அதனால், செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே.

25. ஈயாமை

-புறநானூறு 189

("தானும் உண்ணாது பிறர்க்கும் கொடாது இருத்தல்'

பதுமனார்.

இ.பெ.அ: நாலடி. 28. நீதிக். 49.)

1. பொன்னென்று பேர்படைத்தாற். 2. யொல்லுவ. 3. உண்பவை நாழி யுடுப்பன.