உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஏற்பார்க் கீயார் எதற்கும் உதவார்

231. நாவி னிரந்தார் குறையறிந்துந் தாமுடைய மாவினை 'மாணப் பொதிகிற்பார் - தீவினை அஞ்சிலெ னஞ்சா விடிலென் குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென்.

மாய்வதன் முன்னே ஆய்ந்தறம் செய்க

232. மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதி னறஞ்செய்வார்க் காணாமை நாய்காணிற் கற்காணா வாறு.

தாமே செய்திடார் தண்டிடச் செய்வரோ?

233. தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கலார் பின்னை 'யொருவராற் செய்வித்து மென்றிருத்தல் சென்னீ ரருவி மலைநாட பாய்பவோ

வெந்நீரு மாடாதார் தீ.

இல்லதை இல்லெனல் இணையிலா நன்மை

234. அடையப் பயின்றார்சொல் 'லாற்றுவராக் கேட்டால் உடையதொன் றில்லாமை யொட்டிற் - 5படைவென் றடைய வமர்த்தகண் °ணாயிழா யஃதால் இடைய னெறிந்த மரம்.

ஈயார் துவ்வார் எதற்கோ செல்வம்?

235. பெற்றாலுஞ் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி யிறுகுபவால் - கற்றா வரம்பிடைப் பூமேயும் வண்புன லூர மரங்குறைப்ப மண்ணா மயிர்.

1. யாற்றப். 4. லாற்றுவார்.

2. செய்கல்லார்.

3. யொருவனாற்.

5. படைபெற்.

6. பைந்தொடி