உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நசைக்கொலை புரிவோர் இசையுல கெய்தார் 236. இசைவ கொடுப்பதூஉ மில்லென் பதூஉம் வசையன்று வையத் தியற்கையஃ தன்றிப் பசைகொண் டவனிற்பப் பாத்துண்ணா னாயின் நசைகொன்றான் செல்லுலக மில்.

125

பழமொழி 218, 361, 159,223,215,225

அருள்பொருள் நகைக்க அமைந்தவன் கருமி 237. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் றீகலான் வைத்துக் கழியு மடவோனை - வைத்த பொருளு மவனை நகுமே யுலகத்

தருளு மவனை நகும்.

கருமியும் வறியனும் கருதினால் ஒப்பர்

238. எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனதென தென்றிருப்பென் யானுந் - 'தனதாகத் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது.

ஈயாக் கருமியின் இரவலர் உயர்ந்தோர் 239. வழங்காத செல்வரி னல்கூர்ந்தா ருய்ந்தார் இழந்தா ரெனப்படுத லுய்ந்தார் - உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலு முய்ந்தார்தங் கைந்நோவ யாப்புய்ந்தா ருய்ந்தார் பல.

2

இல்லதை இல்லெனல் எனைத்தும் வசையிலை

240. இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க

நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி கொன்றாரிற் குற்ற முடைத்து.

-நாலடியார் 273, 276, 277, 111

1. தனதாயின்.

2. ருய்ந்த.