உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் 17

விரகில ரென்று விடுத்த பேர்கள்

297. அரசொடு நட்டவ ராள்ப விருத்தி அரவொடு நட்டவ ராட்டியு முண்பர் புரிவளை முன்கைப் புனையிழை நல்லார் விரகில ரென்று விடுத்தனர் முன்னே.

-வளையாபதி 26, 27, 28, 29, 30

நடிப்பதை நம்பினார் நாடகம் ஆடுவார்

298. பனிமதி 'பொழிகதிர் பருகு மாம்பல்போல் முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினார் துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங் கனியநின் றாடுவர் கடையில் காலமே.

கோல மஞ்சினார் கொள்வர் துறக்கமே

299. நிழனிமிர் நெடுமதி நிகரில் தீங்கதிர்ப் பழனவண் டாமரை 3பனிக்கு மாறுபோற் குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார் தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே.

காதல் மிகுங்கால் கற்றது கைகொடா

300. காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால் தாது துற்றுபு “தங்கிய வண்டனார்க்

4

கேத மிற்றென வெண்ணுமென் னெஞ்சரோ.

இருதலைப் பயனும் உய்தா நிலையர்

301. எரிதலைக் கொண்ட காமத் தின்பநீர்ப் புள்ளி யற்றால்

'பிரிவினிற் பிறந்த துன்பம் பெருங்கட லனைய தொன்றால் உருகிநைந் துடம்பு நீங்கி னிம்மையோ டும்மை யின்றி இருதலைப் பயனு மெய்தா ரென்றியாங் கேட்டு மன்றே.

சீவகசிந்தாமணி 1554, 1555, 1632, 1536

1. யின்கதிர்.

2. பழனவென்.

3. பணிக்கு.

4. தாங்கிய. 5. பிரிவின்கட்.